October 31, 2010

லொல்லு சாமியார்...

டேய் நம்ம ஊருக்கு லொள்ளு சாமியாருன்னு புதுசா ஒரு சாமி வந்திருக்காராம்டா....
நம்ம ஊர் ஆலமர பிள்ளையார் கோவில்ல தான் இருக்காராம். வாங்க எல்லோரும் போய் பார்த்துட்டு வருவோம்...

சாமி வணக்கம் சாமி...

சாமியா? நான் எப்போவாவது உங்க வீட்டுக்கு வந்து வீட்டு கதவ தட்டி நான் சாமின்னு சொல்லி இருக்கேனா?

இல்ல சாமி...

அப்புறம் எதுக்கு சாமின்னு சொல்ற? அதான் தெருவுக்கு தெரு வாச்சி இருக்கீங்க இல்ல? அங்கே போகவேண்டியது தானே? இங்கே ஏன் வந்தீங்க?

இல்ல சாமி, உங்கள பார்த்துட்டு போகலாம்னு தான் வந்தோம்.

நான் என்ன சுனாமியில இருந்து தப்பிச்ச திருவள்ளுவர் சிலையா? இல்ல ஆயிரமாவது ஆண்டுவிழ கொண்டாடின தஞ்சாவூர் பெரிய கோயிலா? என்கிட்ட பார்க்கறதுக்கு என்னடா இருக்கு?

உங்கள பார்த்துட்டு போன அதிர்ஷ்டம் வரும்னு சொல்றாங்க...

அடப் பாவி, நானே ஊர் ஊரா, சோத்துக்கு வழி இல்லாம சுத்திகிட்டு இருக்கேன், என்னை பார்த்ததால் அதிர்ஷ்டம் வருமா? அப்படின்னா நான் எந்த நிலமையில இருக்கணும்?.... போய் வேலைய பாருங்கையா, குழந்தைகளை படிக்க வையுங்க, அதுதான் சோறு போடும்.

சாமி, நீங்க எங்கே இருந்து வரீங்க?

ம்.... செவ்வாய் கிரகத்தில இருந்து....

அப்புடியா?

அடப்பாவி, இதையும் நம்புவியா!... உங்களையெல்லாம் திருத்தவே முடியாது, அப்புறம் ஏன் பிள்ளையார் சிலை பால் குடிக்காது? நெருப்புல கடவுள் முகம் தெரியாது? உங்களுக்கெல்லாம் மூளைன்னு ஒண்ணு இருக்கா? இல்லையா?
என்னங்க சாமி பண்றது?, எங்களுக்கு மட்டும் மூளைய கம்மியா வச்சி அனுப்பிட்டாரு அந்த சாமி.
என்னடா? கடையில இட்லி வாங்கும் பொது கெட்டி சட்னிய எனக்கு அதிகமா வச்ச மாதிரியும் உனக்கு கம்மியா வச்ச மாதிரியும் சொல்ற, இதுக்கும் கடவுளா?

சாமி நான் இந்த உலகத்துல வாழற வரைக்கும் சந்தோசமா இருக்கணும் அதுக்கு எதாவது வழி சொல்லுங்க சாமி?
சாகுற வரைக்கும் சந்தோசமா இருக்கனுமா?.... அப்படீன்னா ஒன்னு செய், நீ எப்போவாவது ரொம்ப சந்தோசமா இருப்ப இல்ல,
ஆமா சாமி!
அந்த டைம்ல தற்கொலை பண்ணிக்கிட்டு செத்து போயிடு, சரியா?
என்ன சாமி வழ வழி கேட்டா சாக வழி சொல்றீங்க?
பின்ன என்னடா? வாழ்கையில இன்பம் துன்பம் ரெண்டும் மாறி மாறி தான் வரும், அதா எதிர்கொள்ள தைரியம் இல்லன்னா பேசாம செத்து போயிடு. அது உனக்கும் நல்லது, உன்னை சார்ந்தவர்களுக்கும் நல்லது.

சாமி, எனக்கொரு சந்தேகம்.....
என்ன சொல்லு?
சாமியார போயிட்டா எந்த பிரச்சினையும் இல்லாம நிம்மதியா இருக்கலாம்னு சொல்றாங்களே, அது உண்மையா?
இல்ல, இப்போ நீ வந்து என்னை குடஞ்சி குடஞ்சி கேள்வி கேட்டு தொல்ல பண்ணிக்கிட்டு தானே இருக்க?
எங்கே போனாலும் பிரச்சினைதான்.

சாமி, என் பொண்ணுக்கு கல்யாணம் பண்ணலாம்னு பார்த்தேன், ஆனா அந்த காரியத்த ஆரம்பிச்சதில இருந்து ஒரே மனக்குழப்பமாவே இருக்கு, நிம்மதியே இல்ல, இதுக்கு ஏதாவது வழி இருந்தா சொல்லுங்க சாமி.

வழி தானே.... இந்தா

இந்த பாக்கெட்ல இருக்கும் விபூதிய தொடர்ந்து ஒரு மாசம் பூசிக்கிட்டே வா..

அப்படி பூசிக்கிட்டே வந்த?...

விபூதி தீர்ந்து போயிடும் பாக்கெட்ட தூக்கி எறிஞ்சிடு.

சாமி!...

அடுத்த மாசம் வாய்யா வேற பாக்கெட் தரேன்..

அதில்ல சாமி..

வேற எது?

என் பிரச்சினைக்கு எதாவது வழி சொல்லுங்க...

உன் பிரச்சினை என்னனு இன்னொரு முறை சொல்லு.

என் பொன்னுக்கு கல்யாணம் பண்ணனும்...

அதுக்கு நான் மாப்பிள்ளையா வரணுமா?

ஐயோ!அது இல்லீங்க..

வேற எது?

மாப்பிள்ளை வீட்டுகாரங்க வரதட்சனை கேட்குறாங்க...

பின்ன வரதட்சன கேட்காம உன்கிட்ட ஆட்டோகிராபா கேட்பாங்க,
வரதட்சன கேட்டா தான்யா அவங்க மாப்பிள்ள வீட்டுகாரங்க
சரி நீ கல்யாணம் பண்ணின போது வரதட்சனை வாங்குனியா?

ம்... வாங்கினேனே!...

ம்... நீ வாங்கும் பொது இனிச்சது இப்போ கசக்குதா?
நீ மட்டும் மாமனார் வீட்டு தரைய முதற்கொண்டு துடச்சி எடுத்துகிட்டு வந்துடுவ உன் மகளை கல்யாணம் பண்ணிக்க வரதட்சனை கேட்டால் இங்கே வந்து கம்ப்ளைன்ட் பண்ணிக்கிட்டு இருக்க, என்ன நியாயம்டா இது? வரதட்சனை வாங்க மாட்டோம்னு மாப்பிள்ளை வீட்டு கரங்களும், தரமாட்டோம்னு பொண்ணு வீட்டுக்காரங்களும் ஒரு முடிவு எடுத்துக்கணும், அதுக்கு முதல்ல பெண்கள் ஆண்களுக்கு அடிபணிஞ்சி இருக்கவேண்டியவர்கள் என்னும் எண்ணமும், கருத்தும், வரையறையும் மாறனும். பெண்கள் தங்கள் சுய வருமானத்துல வாழமுடியும் என்னும் நிலை வரணும்.

என்ன சாமி? பேசுறீங்க பெண்கள் குடியரசுத்தலைவர் ஆகிட்டாங்க, மக்களவை தலைவர் ஆகிட்டாங்க, பிளைட் ஓட்டுறாங், லாரி ஓட்டுறாங்க, வேலைக்கு போறாங்க, சொத்துல உரிமை இருக்குனு சட்டம் சொல்லுது, 33%சதவீதம் இட ஒதுக்கீடு வேற இருக்கு .... இதுக்கு மேலயுமா அவங்களுக்கு சுதந்திரம் வேணும்?...

நீ சொல்டறது எல்லாம் நகரத்தில இருக்கிற பொண்ணுங்களுக்கு தான் கெடச்சிருக்கு. கிராமங்கள்ல இன்னும் பெண்களோட அதிகபட்ச படிப்பு 10 ம் வகுப்புதான்.
நீ சொன்னியே இட ஒதுக்கீடு அதகூட ஆண்கள் கிட்ட இருந்து போராடி வாங்க வேண்டி இருக்கு. எல்லோரும் மனுஷங்க தானே? இதிலே ஆண்கள் யாரு பெண்களுக்கு இட ஒதுக்கீடு தர? இதுல இருந்தே தெரியல பெண்கள் இன்னும் கீழேதான் இருக்காங்கன்னு?

பெண்களின் பலமும் பலவீனமும் ஒண்ணேதான், "தாய்மை" அதனாலதான் பெண்கள் இன்னும் அங்கே இங்கே முடங்கி இருக்காங்க. இந்த பலவீனத்த ஆண்கள் நல்ல பயன்படுத்திக்கிறாங்க, எப்படியும் ஒரு சூழ்நிலையில பெண்கள் நம்மை சார்ந்து தானே ஆகணும்கிற கர்வம் பல ஆண்கள் கிட்ட இருக்கு. அவுங்க கிட்ட இருக்கும் அந்த கர்வத்த வளர்க்கிற விதமா இயற்கையும் அவங்களுக்கு சதி செய்கிறது. ஆண்கள், பெண்களும் நம்மை போன்ற ஒரு சக மனுஷிதான், அவர்களுக்கும் உணர்வுகள் இருக்கு, என்ற ஒரு விஷயத்த புரிஞ்சிகிட்டா எல்லாம் சரியாகிடும்.

சரி லொல்லு சாமியாவிடு உன்கிட்ட இத பேசி என்ன ஆகபோகுது, போ வீட்டுக்கு போ, பொய் அந்த மாப்பிள்ளைய அடிச்சி விரட்டிட்டு, வேற ஒரு மாப்பிள்ளை பாரு அவன் பணத்துல மட்டும் குறியா இல்லாம நல்லவனா?, உன் மகளை நல்லபடியா கவனிச்சிக்குவான?னு பார்த்து
கல்யாணம் பண்ணி கொடு.

சரி சாமி. நீங்க சொன்ன மாதிரியே செய்யறேன், நான் வரேன் சாமி...

ரின் லொல்லுகள் தொடரும்...

1 comment:

இராஜராஜேஸ்வரி said...

எங்கே போனாலும் பிரச்சினைதான்.

அதிகம் ரசிக்கப்பட்டவைகள்....

Blog Archive