
மம்மி'க்களின் மறுபக்கம் என்றால் அவற்றை குப்புறப்போட்டு, அவற்றின் முதுகுப்பகுதியில் என்ன இருக்கிறது என்பதை பார்ப்பதில்லை. மும்மி'க்கள் எப்படி உருவாக்கப்படுகின்றன என்பதை அறிந்துகொள்வது. சரியா?
சரி. இப்போது மம்மி'க்கள் எப்படி தயாரிக்கப்படுகின்றன என்பதை அறிவோம்...
பண்டைய எகிப்தில் வி.ஐ.பி.'க்கள் இறந்து விட்டால் அவர்களின்
உடல்களை 'மம்மி'யாக்குவது என்பது ஒரு முக்கியமான பழக்கம். 'மம்மி' செய்வது ஒன்றும் சுலபமான வேலை அல்ல. 'மம்மி' செய்வதில் கை தேர்ந்த நிபுணர்கள் அன்றைய எகிப்தில் இருந்திருக்கிறார்கள்.
இறந்தவர்களின் உடலில்,வயிற்றில் முதலில் துளை போட்டு நுரையீரல், குடல் பகுதிகளை வெளியே எடுத்து ஜாடிகளில் வைத்துவிட்டு பச்ச்சிளைகளை வயிற்றுக்குள் நிரப்பி தைப்பார்கள். இதயம் மட்டுமே உடலுக்குள் விட்டு வைக்கப்படும்.
அடுத்ததாக மூக்கு வழியாக மூளை கவனமாக உறிஞ்சிஎடுக்கப்படும். சில சமயம் கண்கள் அகற்றப்பட்டு செயற்கையான கண்கள் பொருத்தப்படும்.
அடுத்ததாக ஒருவகை உப்புத்தொட்டியில் நாற்பது நாட்களுக்கு உடல் அமிழ்த்தி வைக்கப்படும். உடலில் உள்ள திரவங்கள் பூராவும் இதனால் வெளியேற்றப்படுகிறது. உடல் சிதைவடையாமல் இருக்க இவ்வாறு செய்துள்ளார்கள்.
பிறகு உடலை எடுத்து அதன் மீது மெழுகு போன்ற ஒரு பசையை பூசுவார்கள்.
கடைசியாக அவரவர் வசதிக்கேற்ப தங்கம், வைரம், வைடூரியம் அலங்காரம்.
'mumo'என்றால் மெழுகு.அதிலிருந்துதான் 'mummy' என்ற பெயர் வந்தது.
No comments:
Post a Comment