May 7, 2010

தூக்கு தண்டனையின் வரலாறு.


"இந்த வழக்கின் சாட்சிகளையும், ஆதாரங்களையும் தீர விசாரித்ததில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நபர் தான் குற்றத்தை செய்தார் என்று சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபணமாகிறது. எனவே குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனையாக இ.பி.கோ செக்சன்......இன்படிதூக்குதண்டனைவிதிக்கிறேன்."
என்று நமது தமிழ் சினிமாக்களில் ஒரு பக்க வசனம் பேசி நீதிபதி தண்டனை வழங்குவார். இந்த தூக்கு தண்டனையின் வரலாறு மிகவும் பழமையானது.

தூக்கு தண்டனை அறிமுகம் ஆவதற்கு முன்பு மரண தண்டனை விதிக்கப்பட்ட நபர் விஷம் குடித்து இறக்க வேண்டும் ( நம் தத்துவ தாத்த சாக்ரடீஸ் கூட விஷம் குடித்து தானே இறந்தார் )அல்லது தலையை சீவி விடுவார்கள்( அரச குடும்பங்களில் பொய் வழக்கு போட்டு இப்படித்தான் பலரை கொன்று உள்ளனர் என்று வரலாறு கூறுகிறது ). இந்த முறைகள் தான் நடைமுறையில் இருந்தன.
இந்நிலையில் தூக்கு தண்டனையை முதலில் அறிமுகப் படுத்தியது பாரசீகம் தான். எளிமையான முறையாகவும் குறைந்த செலவுடயாதாகவும் இருந்ததால் இந்த முறை வெகு விரைவாக பல்வேறு நாடுகளுக்கும் பரவியது.

தூக்கு தண்டனையின் ஆரம்ப கட்டத்தில் குற்றவாளியின் கழுத்தில் கயிற்றை கட்டி மேலே இழுப்பார்கள்,
இந்த முறையில் உயிர் பிரிய நீண்ட நேரம் ஆகும். அதிக நேரம் துடிக்க வேண்டியிருக்கும், வேதனை அதிகம். இது நம் வீட்டில் தற்கொலைக்கு முயற்சி செய்வதை போலத்தான்.

பின்னர் சிறிது நாட்கள் கழித்து தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பலரை ஒரே நேரத்தில் ஊரின் மையப் பகுதியில் வைத்து தூக்கிலிட்டனர். இதனைப் பார்க்க பதினெட்டு பட்டியிலிருந்தும் மக்கள் வண்டி கட்டிக்கொண்டு வருவார்கள் என்றால் பாருங்கள்.
கிட்டத்தட்ட 1800௦௦ களுக்குப் பிறகுதான் இந்த திருவிழா போன்ற தூக்கு தண்டனை நிறைவேற்றும் முறையை மாற்றினார்கள்.
முதல் கட்டமாக குற்றவாளியை தனி அறையில் வைத்து தூக்கிலிட்டனர்.
பின்னர் அதிலும் புதிய முறையை பின்பற்றத்தொடங்கினர், அதன்படி உடலை 'தொப்' என்று கீழே விழச்செய்யும் முறை (தற்போது நடைமுறையில் உள்ளது) அதாவது... கயிற்றை கழுத்தில் கட்டி இறுக்கி விட்டு உடலை கீழே விழச்செய்தல்.
இவ்வாறு செய்வதில் உடலின் எடை, கயிற்றின் நீளம் ஆகியவை கணக்கில் கொள்ளப்படுகின்றன.
இம்முறையில் உடல் திடீரென்று பீடத்தின் மேலே இருந்து விழுவதால் 'லாரிங்க்ஸ்' எனப்படும் குரல்வளையும், கழுத்து எலும்பும் 'மடக்' என்று உடைகிறது.
கழுத்து எலும்பு முறிவடைவதால் மூளைக்கு செல்லும் ரத்தம் உடனடியாக நிறுத்தப்படுகிறது. இதனால் உடனே ஏற்படுவது மயக்கம் தான் என்பதால் வலி தெரியாது. ஐந்து அல்லது ஆறு வினாடிகளில் உயிர் பிரிந்து விடும். வேதனையும், வலியும் குறைவு. நீண்ட நேரம் துடித்துக் கொண்டு இருக்கத் தேவையில்லை. உடல் உறுப்புக்கள் அனைத்தும் செயல் திறனை இழக்கின்றன.
ஆனால் இதயம் மட்டும் என்ன நடக்கின்றது என்பது தெரியாமல் ஒரு எதிர்பார்ப்புடன் சில நிமிடங்கள் துடித்துக்கொண்டே இருக்கும்.

இன்று சில நாடுகள் தூக்கு தண்டனையை இல்லாமல் செய்து விட்டன. நம் நாட்டிலும் தூக்கு தண்டனை குறித்து இருவிதமான கருத்துக்கள் உண்டு. தண்டனைகள் கடுமையானால் தான் தப்புக்கள் குறையும் என்கிறது ஒரு தரப்பு. தூக்கு தண்டனை மனித நேயத்திற்கு புறம்பானது என்கிறது மற்றொரு தரப்பு. தவறுகளை குறைப்பதற்காக தான் தண்டனைகள் தோன்றின ஆனால் இன்று வரை தண்டனைகளை மட்டுமே வழங்கிக்கொண்டு இருக்கிறோம், தப்புகள் குறைந்தபாடில்லை.
திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது.

3 comments:

முனைவர் இரா.குணசீலன் said...

நல்ல பகிர்வு மணிகண்டன்..
தொடர்ந்து பதிவு செய்யவும்..

யானையை வைத்து தலையை இடறும் செய்தி பற்றிய பதிவு ....


http://gunathamizh.blogspot.com/2010/05/blog-post_09.html

முனைவர் இரா.குணசீலன் said...

தமிழிசில் தங்களது இடுகையை இணைத்தமைக்கு மகிழ்ச்சி மணிகண்டன்..

தமிழிசின் கீழ் இடது புறத்தில் இருக்கும் ஓட்டளிப்புப்பட்டைக்கான நிரலை தங்கள் வலைப்பதிவின் தளவமைப்புக்குச் சென்று திருத்துக html என்னும் பகுதியில் இணைக்கவேண்டும்..

இணைத்தால் இன்னும் பார்வையாளர்கள் எண்ணிக்கை அதிகமாகும்..

இன்னும் சந்தேகமிருந்தால் என்னைத் தொடர்புகொள்ளவும்..

priyamudanprabu said...

நல்ல பகிர்வு
தொடர்க

அதிகம் ரசிக்கப்பட்டவைகள்....

Blog Archive