May 10, 2010

இந்தியாவில் அம்மாக்கள்.....

தாயில்லாமல் நானில்லை
தானே எவரும் பிறந்ததில்லை......

அம்மா என்றழைக்காத உயிரில்லையே.....

காலையில் தினமும் கண் விழித்தால் நான்
கைதொழும் தேவதை அம்மா......

ஆசைப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தால் வாங்கலாம்
அம்மாவ வாங்கமுடியுமா?..........

இவையெல்லாம் அம்மாக்களைப்பற்றி நம் தமிழ் சினிமாவில் வந்த குறிப்பிடத்தகுந்த சில பாடல்கள். இதுமட்டும் இன்றி அம்மாக்களைப்பற்றி நாம் இன்னும் பல்வேறு கவிதைகளை எழுதி தள்ளிவிட்டோம். நாம் ஆனால் உண்மையில் நம் நாட்டில் அம்மாக்களின் நிலை வேறுமாதிரியாக உள்ளது.

உலக அன்னையர் தினத்தையொட்டி " குழந்தைகளை பாதுகாப்போம் " என்ற அமைப்பு ஆய்வு ஒன்றினை நடத்தியது. நடுத்தர வருமானமுள்ள 77 நாடுகளில் அம்மக்களின் பராமரிப்பு மற்றும் சுகாதாரம் ஆகியவட்ட்ரை மையமாகக் கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இதில் இந்தியாவிற்கு கிடைத்த இடம் என்ன தெரியுமா? 73 இடம்.

குடும்ப அமைப்பை அடிப்படையாகக் கொண்டுள்ள நமது நாட்டில் தான் இந்த நிலை.இந்தியாதான் கலாச்சாரத்திலும், பண்பாட்டிலும் சிறந்த நாடு என்று சொல்லிக்கொள்கிறோம். " இந்தியாதான் எனக்கு பிடித்த நாடு, இந்தியாவின் பண்பாடும், குடும்பமாக சேர்ந்து வாழும் அமைப்பும் தான் என்னை கவர்ந்தது" என்று வெளிநாட்டு பிரபலங்கள் யாரேனும் சொன்னால் பூரித்துப்போகிறோம். ஆனால் நம் நாட்டில் உள்ள 75%பேர் நமது கலாச்சாரத்தை பின்பற்ற தயாராய் இல்லை.

மேற்க்கத்திய கலாச்சார மோகம் நம் நாட்டில் அதிகமாகக் காணப்படுகிறது. தென்னிந்தியாவிலும் கூட அதன் பாதிப்பு இருக்கத்தான் செய்கிறது. மேலும் மாறிவிட்ட மக்களின் மனநிலை, சகிப்புத்தன்மை அற்றத்தன்மை, விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையை விட்டுக்கொடுத்துவிட்டது.... இன்னும் எத்தனையோ காரணங்களினால் நம் நாட்டிலும் குடும்ப வாழ்க்கை முறை அழிந்து கொண்டுதான் உள்ளது. அதற்கு ஆதாரம். முன்பெல்லாம் எங்காவது ஒரு தனிக்குடித்தனம் தான் இருக்கும், அனால் இப்போது எங்கேயாவது ஒரு கூட்டுக் குடித்தனத்தனம் நடத்தும் குடும்பம் தென்பட்டால் அரிதாக இருக்கிறது.
அந்த தனிக்குடித்தனம் செல்லும் தம்பதியர் தங்களின் பெற்றோர் தங்களுடன் இருப்பதை கூட சுமையாக நினைக்கின்றனர். ஆண் பெண் இருவரும் வேலைக்கு செல்லும் குடும்பங்களில், தங்கள் குழந்தைகளை வளர்க்க வேலைக்கு ஒரு பெண்ணை வைத்துக்கொள்கின்றனர், ஆனால் தன் தாயையும் தந்தையையும் உடன் வைத்துக்கொள்ள மறுக்கின்றனர். வீட்டில் செல்லப் பிராணியாக நாயை வளர்க்கின்றனர், தங்களின் தாயை பாதுகாக்க மறுக்கின்றனர். பெற்றோர்கள் நம் உடன் இருந்தால் நமது சுதந்திரம் பறிபோய்விடுமோ? என்ற தவறான உணர்வு. இந்த நிலை வடநாட்டில் மட்டுமல்ல தென்னிந்தியாவிலும்தான்.

எனவே அவர்களை ஒரு முதியோர் இல்லத்தில் கொண்டு சென்று தங்க வைப்பது. மாதம் ஒருமுறை அவர்களை சென்று பார்த்துக்கொள்வது. இதனால் அந்த குழந்தைகளுக்கும் தங்களின் உறவுகளின் மீது பாசம் இல்லாமல் போய்விடுகிறது.
இன்று கல்வி மிகப்பெரும் லாபம் தரும் தொழிலாக உள்ளது. அடுத்து முதியோர் இல்லங்கள் அந்த இடத்தை பிடித்துக்கொள்ளும்.

இன்று தங்கள் பெற்றோரை முதியோர் இல்லத்தில் கொண்டுபோய் விடுபவர்கள் இப்போதே வேறொரு நல்ல முதியோர் இல்லத்தையும் பார்த்து வைத்துக் கொள்வது நல்லது. ஏனெனில் நாளை அவர்களுக்கும் இதே நிலைதான்.

இதைத்தான் திருவள்ளுவர்
பிறர்க்கின்னா முற்பகல் செயின் தமக்கின்னா
பிற்பகல் தாமே விளையும்.

என்று சொல்லியிருக்கிறார்.

இனிமேலாவது மாறுவார்களா மனிதர்கள்?.......

1 comment:

மதுரை சரவணன் said...

அருமையான பதிவு. வாழ்த்துக்கள்.

அதிகம் ரசிக்கப்பட்டவைகள்....

Blog Archive