April 13, 2010
காதல் அன்றும்-இன்றும்......
"இலக்கியம் என்பது வாழ்க்கையை எதிரொலிக்கும் கண்ணாடி" என்பார்கள். அவர்கள் அன்று வழ்ந்ததைத்தான் எழுதிவைத்துள்ளனர் என்பது அவர்களின் படைப்புகளின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. இந்த இலக்கியம் அவர்களின் வாழ்க்கை பிம்பத்தை அவர்களிடம் மட்டும் கட்டாமல் இத்துனை ஆண்டுகள் கழிந்தும் நமக்கும் காட்டுகிறது. அந்த பிம்பங்களில் ஒன்று உங்கள் பார்வைக்கு அல்ல அல்ல அறிவுக்கு.
நமது பண்பாடு, கலாச்சாரம், பண்பாடு இவை எல்லாம் இன்று இல்லை எல்லாம் நம் தாத்தா காலத்தோடு ஒழிந்து விட்டது என்று புலம்புபவரா நீங்கள்? உங்களுக்க்லாக ஒன்றை சொல்லப்போகிறேன்.
இது ஒரு சின்ன சாம்பிள் தான். இலக்கியத்திலிருந்து எனக்கு தெரிந்த ஒரு பகுதி. இது அன்றும் இன்றும் என்றும் இருந்துகொண்டு இருப்பது, இருக்கப்போவது. என்னடா பீடிகை எல்லாம் பலமா இருக்குது ஆனா ஒன்னும் சொல்ல மாட்டேங்கிறானே... என்றுதானே யோசிக்கிறீங்க சொல்லிடறேன்.
காதல்...
காதல் தான் அன்று முதல் இன்று வரை எந்த மாறுபாடும் அடையாம இன்னும் அப்படியே இருக்கு. அதன் வடிவமும், காதலர்களின் மன நிலையும் வேண்டுமானால் மாறியிருக்கலாம். ஆனால் காதல் மாறவில்லை, மாறப்போவதும் இல்லை. காதல்'ல இன்னிக்கு நாம என்னென்ன எல்லாம் செய்கிறோமோ அதையெல்லாம் நம் முன்னோர்களும் செய்திருக்கிறார்கள். செய்ஞ்சது மட்டுமில்லாம அதுக்கெல்லாம் ஒவ்வொரு பேரு வச்சி தெளிவா எழுதி வச்சுட்டு போயிட்டாங்க. அதை இப்போ நான் உங்களுக்கு ஒவ்வொரு ஸ்டெப்பா தெள்ளத்தெளிவா சொல்லப்போறேன்....
இயற்க்கைப்புணர்ச்சி:
"love at first sight" அப்படின்னு ஷேக்ஸ்பியர் சொல்லியிருக்கிறாருல்ல அதுதான் இது. தலைவனும் தலைவியும் எதிர்பாராமல் நடக்கிற சந்திப்பினால காதல் வலையில் விழுவது.[மாட்டிக்கிறது என்னவோ பசங்கதான்]. இன்றைக்கும் நம்ம மாடர்ன் தலைவர்களும், தலைவிகளும் எத்தனையோ பேர் தினமும் காதலில் விழுந்தேன்'ன்னு பாடிக்கிட்டேதான் இருக்கிறாங்க.
இடந்தலைப்பாடு:
இது ரெண்டாவது ஸ்டேஜ் நேத்து வந்த இடத்துக்கு இன்னிக்கும் வருவாங்க இல்ல அப்படீன்னு தலைவனும் தலைவியும் ஒருத்தரை ஒருத்தர் எதிர்பார்த்து முதல் நாள் பார்த்த இடத்துக்கே வர்றது. இன்னிக்கு நம்ம ஆளுங்க என்ன என்ன வித விதமா டிரஸ் பண்ணிட்டு "மச்சி என் ஆளைப் பாக்கப்போறேண்டா" என்று போறாங்க.
பாங்கர் கூட்டம், பாங்கியர் கூட்டம்:
இது நம்ம சினிமால வர்ற காமெடியன்ஸ் மாதிரி பிரண்ட்ஸ் லவ்'க்கு ஹெல்ப் பண்ற பசங்க.அந்த காலத்துல தலைவிக்கு தோழி, தலைவனுக்கு தோழன். இவுங்க மூலமாத்தான் செய்தி பரிமாற்றம் நிகழும். ஆனா இன்னிக்கி செல் போன் வந்துடுச்சி மக்த்ததேல்லாம் உங்களுக்கே தெரியும்.
களவு:
இது திருடுறது இல்லங்க. தலைவனும் தலைவியும் பெற்றோர்களுக்கும், ஊராருக்கும் தெரியாமல் தனிமையில் சந்தித்து பேசிக்கொள்வது. இன்னிக்கும் இது நடக்குது பீச்ல, பார்க்ல, ரோட்டல தலையில துப்பட்டாவை மூடிக்கிட்டு பைக்ல போறது, இந்த மாதிரி நிறைய.
அலர்:
"பல நாள் களவு ஒருநாள் மாட்டிக்கும்" இல்லைங்களா? இப்படி தனியாக சந்தித்து பேசிக்கொண்டிருக்கும் தலைவனையும் தலைவியையும் யாரவது பாத்துட்டு வீட்டுல போய் போட்டு கொடுத்துடுறது. அப்புறம் ஊர் மக்கள் எல்லோரும் இதைப்பத்திதான் பேசுவாங்க. இன்னிக்கும் "உங்க பொண்ண ஒரு பையன் கூட பஸ் ஸ்டாப்ல பாத்தேன். பார்த்து உஷாரா இருந்துக்குங்க." அப்படின்னு யாரோட அப்பவுக்காவது மெசேஜ் போய்க்கிட்டுதான் இருக்கு. சரிதானே?.....
இர்ச்செறித்தல்:
இது என்ன தெரியுமா? தலைவியை அவுங்க வீட்ல எல்லோரும் புடிச்சி அடிச்சி, இனிமேலே வெளியேவே போகக்கூடாதுன்னு அடைத்து வைப்பது. "ஹவுஸ் அர்ரெஸ்ட்." இன்னிக்கும் எத்தனையோ பொண்ணுங்களை "நீ இனிமேலே காலேஜ்'க்கு போகவேண்டாம்"னு சொல்லிடறாங்க.
நொதுமல் வரைவு:
இது என்னன்னா...தலைவியின் வீட்டில் வேறு மணமகன் பார்த்து, அவர்களை பெண் பார்க்க தங்கள் வீட்டிற்கு வரவைப்பது. இப்பல்லாம் பொண்ணு ஒருத்தனை காதலிக்கிறான்னு தெரிஞ்ச உடனே மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்து விடுகிறார்கள். அடுத்த ரெண்டாவது மாசம் அந்த பொண்ணுக்கு கல்யாணம். அந்த பையானுக்கு "கல்த்தா".
நொதுமல்--வேற்று மணமகன்.
வரைவு---திருமணம்.
வரைவு கடாதல்:
தோழி வந்து தலைவனிடம் "அவளுக்கு வேறு திருமண ஏற்ப்பாடு செய்கிறார்கள் அதற்குள் அவளை திருமணம் செய்து கொள்ள ஏதாவது முயற்சி செய்யுங்கள்."என்று சொல்வது. "நீங்க மட்டும் தான் ப்ளான் போடுவீங்களா? நாங்க போடமட்டோமா?" அப்புடீன்னு தலைவியும், தலைவனும் தோழி மூலமாக ரகசியமா திட்டம் தீட்டுவாங்க.
வரைவு--திருமணம்
கடாதல்--வலியுறுத்துதல். திருமணம் செய்து கொள்ளுமாறு வலியுறுத்துதல்.
உடன்போக்கு:
அதாங்க ஓடிப்போறது. இப்போ தலைவனும் தலைவியும் போட்ட திட்டப்படி ஒரு நல்ல நேரமா பாத்து ஓடிப்போறது. சாரி, இப்பெல்லாம் பஸ்சிலயோ? ரயில்லயோ? போயிடுறாங்க.
கற்பு:
இது வந்து என்னான்னா... கல்யாணத்துக்கு அப்புறம் தம்பதிகள் இருவரும் சேர்ந்து வாழ்வது.
அவ்வளவுதாங்க காதல்ல இது ஒரு சின்ன துளிதான். தமிழில் இதுக்காக "அகத்துரைகள்" அப்படின்னு ஒரு தலைப்பு கொடுத்து, நிறைய எழுதி வச்சிருக்காங்க.
Labels:
இன்னும் மாறவில்லை.....
Subscribe to:
Post Comments (Atom)
அதிகம் ரசிக்கப்பட்டவைகள்....
-
இன்று உலக நாடுகள் அனைத்திற்கும் பொதுவான, முக்கியமான பிரச்சினை என்று பார்த்தால் அது உலகம் வெப்ப மயமாதல் தான். இங்கு உலக நாடுகள் என்பது எ...
-
மம்மி'க்களின் மறுபக்கம் என்றால் அவற்றை குப்புறப்போட்டு, அவற்றின் முதுகுப்பகுதியில் என்ன இருக்கிறது என்பதை பார்ப்பதில்லை. மும்மி&...
-
"இந்த வழக்கின் சாட்சிகளையும், ஆதாரங்களையும் தீர விசாரித்ததில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நபர் தான் குற்றத்தை செய்தார் என்று சந்தேகத்துக...
1 comment:
மணிகண்டன் உன்னை நினைத்தால் மிகவும் பெருயாகவுள்ளது. கணினி அறிவியல் துறை சார்ந்து நீ இருந்தாலும் தமிழ் மீது நீ கொண்ட ஆர்வம் பாராட்டத்தக்கது..
அகத்துறைகளை இக்கால வாழ்வியலோடு அருமையாக ஒப்பிட்டுள்ளாய்..
வாழ்த்துக்கள்..
தமிழ்மணம், தமிழிஷ் போன்ற திரட்டிகளில் உனது இடுகைகளை இணைக்கவும்..
என்றும் அன்புடன்..
Post a Comment