March 18, 2010

சாக்ரடீஸ் ஒரு முட்டாள்?

இன்று உலகிலேயே மிகச்சிறந்த தத்துவ ஞானி என்று அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட சாக்ரடீஸ்'இன் வாழ்வில் நிகழ்ந்த ஒரு நிகழ்வு. அவர் ஏன் இன்றும் அனைவராலும் பேசப்படுகிறார்? என்றால் அது இதனாலும் தான்.

ஒரு முறை ஏதென்ஸ் நகர மக்கள் அனைவரும் அந்நகரில் உள்ள டெல்பி கோவிலுக்கு முன் கூடி, இந்த ஏதென்ஸ் நகரிலேயே யார் அறிவாளி? என்று கேட்டுள்ளனர். கோவிலுக்குள்ளிருந்து 'சாக்ரடீஸ்'தான் அறிவாளி என்று அசரீரி ஒலித்துள்ளது. இதைக்கேட்ட ஏதேன்ஸ் மக்கள் சாக்ரடீசைக்கான ஓடினர். குதிரை லாயத்தில் குதிரைக்கு லாடம் தயாரித்துக்கொண்டிருந்த சாக்ரடீஸ்'இடம் இதனைத்தெரிவித்தனர். கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாத சாக்ரடீஸ்
"இந்த ஏதென்ஸ் நகரிலேயே நான் ஒருவன் தான் முட்டாள் என்பது எனக்குத்தெரியும். அந்த உண்மையை அறிந்து கொள்ளும் அறிவு எனக்கு மட்டும் தான் உள்ளது என்பதால் அப்படிச் சொல்லியிருக்கும்."என்று கூறினாராம்.

No comments:

அதிகம் ரசிக்கப்பட்டவைகள்....

Blog Archive