April 15, 2011

யாரு முட்டாள்?


எல்லோருக்கும் வணக்கம் ஒரு வழியா தமிழக தேர்தல் முடிஞ்சிடுச்சி. மக்கள் தங்கள் ஜனநாயக கடமையை முடிச்சிட்டு ரெஸ்ட் எடுத்துட்டு இருக்காங்க. இது வரைக்கும் இல்லாத அளவு அதிகபட்சமா 77% வாக்குகள் பதிவு ஆகி இருக்குன்னு சொல்றாங்க, அதெல்லாம் சந்தோஷம் தான் ஆனா, இதுல எவ்வளவு பேர் உண்மையாவும், நேர்மையாவும், காசு வாங்காம ஓட்டு போட்டாங்க அப்டிங்குறது தான் யாருக்கும் தெரியாத கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.

தேர்தல் முடிவுகள் மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் விதமாக இருக்கப் போகின்றனவா? அல்லது முடிவுகள் அரசியல் கட்சிகளின், அரசியல் வாதிகளின் முயற்சிகளுக்கான பலன்களாக இருக்குமா?

அப்படி முடிவுகள் மக்களின் எண்ணங்களின் வெளிப்பாடு தான் என்றால் அவை கட்சிகளுக்கு அப்பாற்பட்ட, சாதிகளை சார்ந்து இருக்காத, சுய தேவைகளை முன் நிறுத்தாத, நாட்டின் பொதுவான தேவைகளை அடிப்படையாகக் கொண்ட, பாகுபாடுகள் ஏதும் இல்லாமல், குறிப்பாக விலை பேசி விற்கப்படாத வாக்குகளாக ஜனநாயகத்தின் உண்மயான வெளிப்பாடாக இருக்குமா?

அல்லது இவை அரசியல் வாதிகள் முன்னரே தீர்மானித்து வைத்த முடிவுகளாகவும், அவர்களின் தனிப்பட்ட முயற்சிகளுக்கான வெற்றியாகவும் தான் இருக்குமா?
அப்படி முன்னராகவே முடிவு செய்யப்பட்ட முடிவு தான் என்றால் இங்கே நடந்த தேர்தல் எதற்காக? யார் யாரை ஏமாற்ற? அரசியல் வாதிகள் மக்களை ஏமாற்றவா? அல்லது உண்மையான ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ள கொஞ்சம் மக்களை மீதம் இருக்கும் மக்களே ஏமாற்றவா? அல்லது தேர்தல் என்பது நமது முறை, நம்மிடம் இருது கொள்ளை அடித்த பணத்திலிருந்து ஒரு பகுதியை கொஞ்சம் கொஞ்சமாக பிரித்து நாமே வாங்கி கொள்ளலாம் என்று அவர்களை பழி தீர்த்துக் கொள்ளவா? இல்லை அப்படி பழி தீர்த்துக் கொள்ள நினைப்பது தான் அறிவுடைமை ஆகுமா?

தேர்தல் நேரத்தில் தான் அரசியல் கட்சிகள் மக்கள் மீது கொண்டுள்ள மதிப்பீடுகள் வெளிப்படுகின்றன. வெளிக்கொண்டு வருபவை தேர்தல் அறிக்கைகள்..........

இந்த தேர்தலின் பொது அரசியல் கட்சிகள் வெளியிட்ட தேர்தல் அறிக்கைகளில், அது இந்த கட்சியாக இருந்தாலும் சரி அதில் உள்ள ஒவ்வொரு வரியும் இலவசம் என்ற வார்த்தையில் தான் முடிவடைகின்றன.

இலவசம் இலவசம் இலவசம் எல்லாமே இலவசம்........

அதிலும் ஒரு கட்சி தேர்தல் அறிக்கை வெளியிட்டு இருந்தது அதில் இருந்த சில இலவச திட்டங்கள் இதோ........ " பருவம் அடைந்த பெண்களுக்கு பட்டு துணியும், ரொக்கமும் இலவசம், மேலும் அவர்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் சானிடரி நாப்கின்கள் இலவசமாக வழங்கப்படும்......" இப்படி போகின்றன திட்டங்கள்.
இதற்கு பதில் அவர்கள் மக்களை வரிசையாக நிற்க வைத்து செருப்பாலேயே அடித்து இருக்கலாம். அரசியல் கட்சிகள் மக்களை எவ்வளவு கேவலமாக நினைத்து இருந்தால் இதுமாதிரியான ஒரு தேர்தல் அறிக்கை வெளியில் வந்து இருக்கும்?

"இலவசமாக எதை தூக்கி கொடுத்தாலும் சரி இந்த ஜனங்கள் பல்லை இளித்துக்கொண்டு நமக்கு ஓட்டை போட்டு விடுவார்கள் நாமும் எளிதாக ஆட்சியை பிடித்து விடலாம்" என்று பகிரங்கமாக அறிவிக்கிறார்கள். இவ்வளவு நாட்கள் தெரியாமல், மறைவாக வாக்காளர்களுக்கு பணம், இலவச பொருட்ட்களை கொடுத்து வந்தவர்கள் இப்போது ஊடகங்கள் வாயிலாகவே, வெளிப்படையாகவே கூறுகிறார்கள், நாங்கள் ஓட்டுக்கு பணம் கொடுக்கிறோம் எங்களை ஜெயிக்க வைத்து விட்டு வாங்கி கொள்ளுங்கள் என்று. ஆஹா... என்ன ஒரு ராஜதந்திரம்.... தமிழன் தமிழன்தான்.
மக்கள் என்ன செய்கிறார்கள்?... "அட இவங்க வந்தா இவ்வளவு லாபம், இதுவே அவங்க வந்தா அவ்வளவு லாபம், யாரு அதிகம் தராங்களோ அவங்களுக்கு ஓட்டு போடலாம்." என்று லாப கணக்கு போடுகிறார்கள். இவர்களுக்கு என்ன என்ன இழக்கிறோம் என்று நஷ்ட கணக்கு போட தெரியவும் இல்லை, அதை பற்றி யோசிப்பதும் இல்லை.

"யார் எவ்வளவு கொள்ளை அடித்தல் நமக்கு என்ன? நமக்கு இந்த தேர்தல்ல லாபம் எவ்வளவு? அதை பாருங்கடா முட்டாள் பசங்களா...." என்று நியாயம் பேசும் என்னை போன்றவர்களுக்கு கிடைப்பது முட்டாள் பட்டம். இதையெல்லாம் மக்களாக யோசிக்கும் வரையில் என்னால் முடிந்தது இப்படி ஏதாவது எழுதிக்கொண்டு இருப்பது தான்.

"இவர்களை நம்மால் திருத்த முடியும் ன்னு தோனல......." என்று தலையில் அடித்துக்கொண்டு யாருக்கும் வாக்களிக்க விருப்பம் இல்லை என்று பதிவு செய்து விட்டு வந்து விட்டேன். நீங்க சொல்லுங்க யாரு முட்டாள்?

7 comments:

அருள் said...

அவசரம்: ராஜபட்சேவை தண்டிக்க உதவுங்கள்

http://arulgreen.blogspot.com/2011/04/blog-post_16.html

முனைவர்.இரா.குணசீலன் said...

நல்ல சிந்தனை மணிகண்டன்.
நம்மால் இந்த சமூகத்தை மாற்ற முடியுமா..?

நி்ச்சயமாக முடியாது.

நம்மால் இந்த உலகில் மாற்றத்தக்க ஒருவர் இருக்கிறார் என்றால் அது நாம் தான்.

நாம் முதலில் நம்மை மாற்றிக்கொள்வோம் சமூகம் தானாக மாறும் என நம்புவோம்.

முனைவர்.இரா.குணசீலன் said...

உண்மை என்னன்னா...?
எரிகிற கொள்ளியில எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி என்பது மாதிரிதான் இன்று தேர்தலில் நின்ற வேட்பாளர்கள் ஒவ்வொருவரும்..

ஒருத்தனுக்கு ஒருத்தன் குறைஞ்சவனில்லை..

மக்களுக்கும் வேற வழியில்லாம ஓட்டுப்போட்டாங்க..

இவங்களுக்கு எதிரா ஒரு குப்பத்தொட்டியை வெச்சாக் கூட இவங்க மேல உள்ள கோபத்தைக் காட்ட அந்தக் குப்பைத் தொட்டிமேல ஓட்டுப்போடக் கூட பலர் தயாராத் தான் இருக்காங்க..

முனைவர்.இரா.குணசீலன் said...

நிச்சயமா காலகாலகாலகாலகாலமா ஏமாற்றப்பட்ட்ட்ட்ட்ட்ட்டு வரும் மக்கள்தான் முட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டாள்கள்.

ஆனந்தி.. said...

அடுத்த மாசம் தெரிஞ்சுரும் யாருன்னு...:)))

ஆனந்தி.. said...

தங்களை வலைச்சரத்தில் அறிமுகபடுத்தியுள்ளேன்..

http://blogintamil.blogspot.com/2011/04/blog-post_4612.html

முனைவர்.இரா.குணசீலன் said...

மணி உங்களை வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளேன்.

http://blogintamil.blogspot.com/2011/07/blog-post_20.html

அதிகம் ரசிக்கப்பட்டவைகள்....

Blog Archive