April 10, 2010

வாய் விட்டுச்சிரித்தால் நோய் விட்டுப்போகும்......


"டாக்டர், எனக்கு உங்க ஆஸ்பத்திரியில 6ம் நம்பர், 100ம் நம்பர் தவிர எது வேணும்னாலும் கொடுங்க!"
"ஏன்?...."
"ஆறிலும் சாவு, நூறிலும் சாவுன்னு சொல்றாங்களே!"

"எதுக்கு அந்த கண்டக்டரோட சண்டை போட்டே?"
"வயித்துல இருக்கிற குழந்தைக்கும் டிக்கெட் எடுன்னு சொல்றாருடி!"

"கபாலி இனிமேலே நமக்கு மாமூல் தரமட்டானாம்!"
"ஏனாம்?"
"அவன் பக்கத்து ஊருக்கு திருடப்போன பொது எவனோ அவன் வீட்ல திருடிட்டானாம். அதை நாம தடுக்கலைன்னு கோபமாம்."

"ஹலோ டாக்டர் ஏன் கணவர் பேனாவை விழுங்கிவிட்டார்!
கொஞ்சம் சீக்கிரம் வந்தீங்கன்ன நல்லா இருக்கும்!"
"பத்து நிமிஷத்துல வந்துடுறேன்மா..."
"அதுவரை நான் என்ன பன்னட்டும்?"
"பென்சிலை பயன்படுத்துங்க!"

"காரட்டை பச்சையா சாப்பிட்டா கண்ணுக்கு நல்லதுன்னு டாக்டர் சொன்னார்... ஆனா, கடையில போய் பார்த்தேன் கிடைக்கவே இல்லை"
"என்னது... காரட் கிடைக்கலைய?"
"ஆமா... எல்லா காரட்டும் சிவப்பா இருக்கு! ஒண்ணு கூட பச்சையா இல்ல!"

"நீங்க எப்படி சாமியார் ஆனீங்க?"
"கல்யாணம் ஆகாம ரொம்ப கஷ்டப்பட்டேன். அதனாலதான்!
ஆமா.... நீங்க எப்படி சாமியார் ஆனீங்க?"
"கல்யாணம் ஆகி படு பயங்கரமா கஷ்டப்பட்டேன். அதனாலதான்!"

"இதுக்கு மேல இந்த படத்தை எடுக்க வேண்டாம் சார்...."
"ஏன் சார்?...பாதி படம் தானே எடுத்திருக்கிறோம்?"
"ஆமா... பாதி படமே திருட்டு சி.டி வழியா மக்கள் பார்வைக்கு போய் படம் 'பிளாப்'ன்னு ரிசல்ட் வந்துடுச்சு!"

"அந்த கல்யாண மண்டபத்துல ஏன் எல்லோரையும் செக் பண்ணி உள்ளே அனுப்புறாங்க?"
"மொய்ப்பணம் இருந்தாதான் உள்ளே விடுவாங்களாம்!"

"உங்க பையனுக்கு இந்த ஜன்மத்துல கல்யாணமே நடக்காது."
"ஏன் தரகரே இப்படி சொல்றீங்க?"
"பின்ன என்னங்க... டி.வி சீரியலே பார்க்காத பொண்ணு வேணுமுன்னு கேட்கிறான்!"

"நினச்ச இடத்தை அடையணும்னா மனுஷனுக்கு நாணயம் வேணும்."
"இல்லையின்னா?..."
"சில்லறை இல்லைன்னு கண்டக்டர் இறக்கி விட்டுடுவாரு!"

"பேராண்டி...நீ இப்போ எத்தனாவது படிக்கிற?"
"பி.ஏ. ரெண்டாவது வருஷம் பாட்டி"
"அப்போ, போனவருஷம் பெயில் ஆயிட்டியா?..."

"திருமணத்திற்குப் பிறகு படங்களில் நடிப்பீங்களா?"
"கணவர் சம்மதிச்சா நடிப்பேன்."
"கணவர் சம்மதிக்கலைன்னா?"
"அவரை டைவஸ் பண்ணிட்டு நடிப்பேன்!"

"என்னதான் இருந்தாலும் நம்ம சம்பந்தி இப்படி நடந்துக்கக்கூடாது!"
"என்ன செஞ்சாரு?"
"கல்யாண விருந்து சாப்பிட்டிட்டு வர்றவங்க மறுபடியும் சாப்பிடாமல் இருக்க விரல்ல 'மை' வச்சு விடுறாரு!"

"ஆபரேஷன் பண்ண இறங்கிட்டா எங்க டாக்டர் தன்னையே மறந்து விடுவார்!"
"இது பரவாயில்லை,...எங்க டாக்டர் எப்படி ஆபரேஷன் பண்ணனும் என்பதையே மறந்து விடுவார்!"

1 comment:

முனைவர் இரா.குணசீலன் said...

நயமான நகைச்சுவைகள் மணிகண்டப்பிரபு..

அருமை.


தங்களின் தொடர் ஆர்வம் வரவேற்புக்குரியது..

இடையிடையே தங்கள் துறைசார் கட்டுரைகளையும் தங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்..

அதிகம் ரசிக்கப்பட்டவைகள்....

Blog Archive