April 1, 2010

ஒரு பழம் ஐந்து ருபாய்?...


ஒருமுறை நானும், எனது நண்பர்களும் எங்கள் கல்லூரிப் பேருந்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்தோம். வரும் வழியில் தர்பூசணிக் கடைகள் அதிகம் இருக்கின்றன. கல்லூரியை விட்டு சிறிது தூரம் வந்ததும் தர்பூசணி சாப்பிடலாம் என்று அனைவருக்கும் எண்ணம் வந்தது. நண்பர்கள் பேருந்து ஓட்டுனரிடம் சொல்லி பேருந்தை ஒரு தர்பூசணிக்கடையில் நிறுத்தச் செய்தனர். அந்த கடையில் கடைக்காரர் இல்லை. அவருக்கு பதிலாக ஒரு சிறுவன், அவனுக்கு ஒரு ஐந்து வயது இருக்கலாம்.அவனை விட்டு விட்டுச்
சென்றிருந்தார் அந்த கடைக்காரர். அநேகமாக அவன் அவருடைய மகனாகத்தான் இருக்க வேண்டும். நாங்கள் அவனிடம் சென்று ஒரு பழம்( முழு பழம்) எவ்வளவு தம்பி? என்று கேட்டோம். அதற்கு அந்த சிறுவன் ஐந்து ரூபாய் என்றான்.(அவன் ஒரு பழம் என்பதை ஒரு கீற்று அதாவது பழத்தின் வெட்டப்பட்ட ஒரு பகுதி என்று நினைத்துக்கொண்டான்) அவன் ஐந்து ரூபாய் என்றதும் எங்களுக்கு அடக்கிக்கொள்ள முடியாமல் சிரிப்பு வந்து விட்டது. பிறகு நாங்கள் சிறிது நேரம் காத்திருந்தோம். ஆனாலும் கடைக்காரர் வராததால் சிரித்துக்கொண்டே அந்த இடத்தை விட்டு நகர்ந்தோம்.நீண்ட நாட்கள் ஆகியும் இன்னும் இந்த நிகழ்வு எங்கள் நினைவுகளில் இருந்து நீங்கவில்லை

No comments:

அதிகம் ரசிக்கப்பட்டவைகள்....

Blog Archive