April 1, 2010
இடியா? வெடியா?...
ஒரு முறை எங்கள் வீட்டின் தொலைக்காட்சிப் பெட்டி பழுது அடைந்து விட்டது. பழுது பார்ப்பவரை அழைத்துக்கொண்டு வந்து சரி செய்து விட்டோம். இதனை அனைவரும் அதோடு விட்டுவிட்டோம்.
அப்போது பக்கத்து ஊரில் திருவிழா நடந்து கொண்டிருந்த சமயம். இரவில் சாமி ஊர்வலம் நடக்கும். சிறிய தேரில் கடவுளின் உருவச்சிலையை வைத்துக் கொண்டு எல்லா பகுதிகளுக்கும் செல்வது வழக்கம். அப்போது மக்களை விழிக்க வைப்பதற்காக வெடி வைப்பார்கள். வழக்கம் போலவே அன்று இரவும் சாமி ஊர்வலம் வந்து விட்டுச்சென்றது. மறுநாள் காலை எழுந்து நான் தொலைக்காட்சிப் பெட்டியை இயக்குவதற்காக அதன் சுவிட்ச் போர்டு அருகில் சென்றேன். அதன் வயர்'கள் கழற்றப்பட்டு இருந்தன. யார் இதனை கழற்றியது? என்று நான் கேட்க... என் அம்மா சிரித்துக்கொண்டே சமையல் அறையில் இருந்து வெளியே வந்தார்.
என்ன காரணம்? எதற்க்காக சிரிக்கிறீர்கள்? என்று கேட்டேன். அதற்கு என் அம்மா சொன்ன பதில்...
" இரவில் வெடிச்சத்தம் கேட்டு எழுந்த உன் அப்பா இடி இடிக்கிறது என எண்ணி, டி.வி'க்கு ஏதாவது ஆகிவிடும் என்று ஒயர் களை கழற்றி விட்டு விட்டார். " என்று கூறியதும் எங்கள் அனைவருக்கும் சிரிப்பு.
அப்பா இன்னும் டி.வி பயத்திலிருந்து வெளியில் வரவில்லை போலும். எங்கே மறுபடியும் டி.வி செலவு வைத்துவிடுமோ? என்று பயந்து கொண்டே இருந்திருக்கிறார். என்று அனைவரும் என் அப்பாவை கேலி செய்து சிரித்தோம். அப்பா வடிவேலுவைப்போல் விழித்தார். சிரிப்பொலி நீண்ட நேரம் தொடர்ந்தது.
Labels:
மறக்க முடியுமா?...
Subscribe to:
Post Comments (Atom)
அதிகம் ரசிக்கப்பட்டவைகள்....
-
இன்று உலக நாடுகள் அனைத்திற்கும் பொதுவான, முக்கியமான பிரச்சினை என்று பார்த்தால் அது உலகம் வெப்ப மயமாதல் தான். இங்கு உலக நாடுகள் என்பது எ...
-
மம்மி'க்களின் மறுபக்கம் என்றால் அவற்றை குப்புறப்போட்டு, அவற்றின் முதுகுப்பகுதியில் என்ன இருக்கிறது என்பதை பார்ப்பதில்லை. மும்மி&...
-
"இந்த வழக்கின் சாட்சிகளையும், ஆதாரங்களையும் தீர விசாரித்ததில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நபர் தான் குற்றத்தை செய்தார் என்று சந்தேகத்துக...
1 comment:
Hai friend this is Thangaraj
This is one of the best three minutes that i have been spent in my life.
And expect more like this from you..........
Post a Comment