March 27, 2010

வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டுப்போகும்!



ஆசிரியரும்-மாணவரும்:

ஆசிரியர்: " நாம உயிர் வாழ தேவையான ஆக்சிஜனை 1773க்குப் பிறகு தான் கண்டு
பிடிச்சாங்க."
மாணவர்: "நல்ல வேலை மேடம், நாம 1773க்குப் பிறகு பிறந்தோம்.
இல்லேன்னா மூச்சு விட முடியாம செத்துப்போயிருப்போம்ல?..... "


ஆசிரியர்: "முட்டாள் கேட்குற கேள்விகளில் சில சமயம் ஒரு புத்திசாலி கூட பைத்தியமாகி
விடுவான்."
மாணவர்: "உண்மைதான் சார்... கொஸ்டீன் பேப்பரை பார்க்கும் போதெல்லாம் இதேதான்
எனக்கும் தோணுது...!"

நேர்முகத்தேர்வில்:

"உங்கள் பெயர்?"
"கமல்...."
"வீட்டில் எப்படி கூப்பிடுவாங்க?"
"கிட்ட இருந்தா மெதுவாக் கூப்பிடுவாங்க, தூரமா இருந்தா சத்தமா கூப்பிடுவாங்க!"

இரண்டு நண்பர்கள்:

"ஹோட்டல்ல சாப்பிட்டு முடிச்சிட்டுப் பார்க்கிறேன்.... கையிலே காசில்ல..."
"அடப்பாவமே! அப்புறம்?"
"அப்புறம் என்ன? பையிலிருந்து எடுத்துக் கொடுத்துட்டு வந்தேன்...."

வானொலியில் தொலைபேசி வழி நேயர் விருப்பத்தில் ஒரு உரையாடல்......

"ஹலோ வணக்கம்!"
"வணக்கம்!சொல்லுங்க..."
"வணக்கம் தான் சொல்லிட்டேனே....."
"அதில்லைங்க...."
"எது இல்லை..."
"சரி, நீங்க எங்கே இருந்து பேசுறீங்க?"
"போனுக்கு பக்கத்துல இருந்துதான் பேசறேன்..."
"சரி என்ன...பட்டு வேணும்?"
"சினிமாப் பட்டுத்தான்..."
"சரி, எந்த படத்துல இருந்து?"
"சினிமா படத்துல இருந்துதான்..."
"அய்யோ!...."

இரண்டு நண்பர்கள்:

"இன்று மழை வரும்னு செய்தியில சொன்னாங்களே, நீங்க கேட்டீங்கள?"
"நான் கேடல, அவங்களாகத்தான் சொன்னங்க..."

கணவன்-மனைவி:

" ஏங்க நமக்கு கல்யாணமாகி 15 வருஷமாச்சி.என்ன செய்யலாம்?"
"ரெண்டு நிமிஷம் மொளனமா நிக்கலாம்!"

இரண்டு நண்பர்கள்:

" அவரை குடும்ப டாக்டரா வச்சது தப்பா போச்சு."
"ஏன் அப்படி சொல்ற?"
"பேஷன்ட் யாரும் வராததால், கஷ்டத்துல இருக்கேன்னு சொல்லிட்டு தினமும் மூணு வேலையும் எங்க வீட்டுக்கு சாப்பிட வந்துடுறாரு..."

மாப்பிள்ளை வீட்டார்: " எங்களுக்கு பெண்ணை பிடிச்சிருந்தாதான் சாப்பிடுவோம்!"
பெண் வீட்டார்: " நாங்க பொன்னை பிடிச்சிருக்குன்னு சொன்னாதான் சமையலே செய்வோம்!"

இரண்டு நண்பர்கள்:

" என் மனைவி எள்ளுன்னா எண்ணையா நிப்பா"
"சொன்ன பேச்சை கேட்க மாட்டான்னு சொல்லு!"

இரண்டு நண்பர்கள்:

"அந்த டைரக்டர் தன் படத்தோட கதையை ரொம்ப ரகசியமா வச்சிருக்காராமே?...."
"ஆமாம், அவர் படத்தைப் பார்த்தால் கூட கதையை தெரிஞ்சுக்க முடியாது!"

அரசரும்-அமைச்சரும்:

"அரசே , பக்கத்து நாட்டு அரசன் போருக்கு தயார என்று ஓலை அனுப்பி இருக்கிறார்."
"பாட்டி இறந்து விட்டார் என்று ஒரு வாரம் அவகாசம் கேளுங்கள் அமைச்சரே...!"

"மன்னா, எதிரி மன்னனுக்கு போர்க்கலையில் அனைத்து நுணுக்கங்களும் தெரியுமாமே?"
"இருக்கட்டுமே, எனக்கு போர்க்களத்தில் தப்பியோட அனைத்து நுணுக்கங்களும் தெரியுமே!"

இரண்டு தொண்டர்கள்:

" நம்ம தலைவர் பொது அறிவுல ரொம்ப வீக்கா இருக்கிறார்."
" எப்படி சொல்ற?"
" மில்க் ஷேக்'ன்னு சொன்னா அரேபியாவுல இருக்கிற பால்காரரான்னு கேக்குறாரு!"

அம்மாவும்-பையனும்:

" என்னடா முதல் ரேங்க் வாங்கியிருக்கேன்னு சொன்னே? ரேங்க் கார்ட்ல 10 வது ரேங்க்'ன்னு போட்டிருக்கு?"
"என்னக மிஸ் '0௦'க்கு வேல்யு இல்லேன்னு சொன்னங்கம்மா!"

1 comment:

மணிகண்டபிரபு said...

நல்லா இருக்கே..

அதிகம் ரசிக்கப்பட்டவைகள்....

Blog Archive