March 26, 2010

சாதி ஒழிக்கப்படுமா? படாதா?



சாதிகள் இல்லையடி பாப்பா! என்றார் பாரதியார். ஆனால் அவரே எங்கள் பிராமிணர் குலத்தைச் சேர்ந்தவர் என்று இப்போது சிலர் கூறிக்கொண்டுள்ளனர். ஊருக்கு ஊர் சாதிச் சங்கங்கள் இருக்கின்றன. ஒரே சாதியைச் சேர்தவர்கள் ஒன்றாக ஒரு பகுதியில் இருந்தால் அந்த பகுதியை தனி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்று போராட்டம் நடத்துகின்றனர். சாதிக்கலவரங்கள், சாதி மாநாடுகள், சாதி ஊர்வலங்கள், ஒவ்வொரு சாதிக்கும் தனி இடஒதுக்கீடு, இன்னும் எத்தனையோ...
பள்ளிகளில் மாணவர்களுக்குள் ஏற்றத்தாழ்வும், வேறுபாடும் இருக்கக்கூடாது என்பதற்க்காகத்தான் சீருடை வழங்கப்படுகிறது. ஆனால் அந்த பள்ளியில் சேருவதற்கே இன்று சாதிச்சான்றிதழ் வழங்கவேண்டி இருக்கிறது. தமிழ்நாட்டில் கட்சிகளுக்கும், சாதிச்சங்கங்களுக்கும் அளவே இல்லை! ஒவ்வொரு ஆண்டும் சாதிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டேதான் போகிறது. இதை அரசியல் வாதிகள் தங்கள் சுய லாபத்திற்காக பயன்படுத்திக்கொள்கிறார்கள்.
ஒரு சின்ன நகைச்சுவை:

ஒருமுறை உலக நாடுகள் அனைத்திற்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. அதில் "ஒவ்வொரு நாட்டிலிருந்தும் பத்து பேரை செவ்வாய் கிரகத்திற்கு அழைத்துச்செல்லப்போகிறோம் உங்கள் நாட்டிலிருந்து யார் வரப்போகிறார்கள்? என்பதை எங்களுக்கு கூறவேண்டும்." என்று கூறப்பட்டிருந்தது.

எல்லா நாட்டிலிருந்தும் மனிதர்கள் வந்து விட்டனர். இந்தியாவில் எப்படி ஆட்களை தேர்வு செய்தீர்கள்? என்று கேட்டதற்கு "மிகவும் எளிது BC'ல் ரெண்டுபேர், MBC'இல் ரெண்டுபேர் SC'இல் ரெண்டுபேர்,.... இப்படி ஆட்களை எடுத்தோம்." என்றாராம் நம் நாட்டு தலைவர் ஒருவர்.

இன்று நம் நாட்டில் இருக்கும் (CAST) பிரிவுகள் குறைவுதான் என்றாலும் அவற்றின் கீழுள்ள சாதிகள் ஏராளம்.(எடுத்துக்காட்டிற்கு பள்ளிகளில் வருகை ப்பதிவேட்டின் முதல் மூன்று பக்கங்களை எடுத்துப் பார்த்தல் தெரியும். அதில் இடம் பெறாத சாதிகளின் பெயர்கள் எத்தனையோ?)
தந்தை பெரியார் அவர்கள் சாதிப் பாகுபாடுகள் இருக்கக்கூடாது என்று போராட்டம் நடத்தினார்,ஆனால் அப்போது கூட பிராமிணர், சத்ரியர் ,வைசியர்,சூத்திரர் என்ற நான்கு பிரிவுகள் தான் இருந்தது. அதையே கூடாது என்று போராட்டம் செய்தார். ஆனால் தற்போது எண்ணிலடங்காத சாதிகள். இவற்றை இனிமேல் வரும் இளைய தலைமுறையினர் நினைத்தால் கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து, இல்லாமலே செய்து விடலாம். இதனை நடைமுறைப்படுத்தினால் ஏற்ப்படும் இடஒதுக்கீட்டுப் பிரச்சினைகளையும் தீர்ப்பதற்கு வழிகள் உள்ளன. குறைந்த பட்சம் சாதிகளின் பெயர்களை குறிப்பிடாத அளவிற்காவது மாற்றம் தேவை. சிந்திப்பார்களா இளைஞர்களும், அரசியல் வாதிகளும்?....

No comments:

அதிகம் ரசிக்கப்பட்டவைகள்....

Blog Archive