March 26, 2010

தத்துவத்திற்கு தண்டனை?

தத்துவத்திற்கு தண்டனை! என்ன இது? என்று யோசிக்கிறீர்களா? தத்துவத்தாத்த சாக்ரடீஸ்'க்கு தான் தண்டனை.
ஆம், தன் வாழ்நாளில் பெரும் பகுதியை தத்துவங்களை போதித்தே கழித்த சாக்ரடீஸ்'க்கு ஏதென்ஸ் நகர அரசு மரண தண்டனை விதித்தது. உலகம் இன்று வரை நினைத்து நினைத்து வியக்கும் அவரின் முடிவு சுகமானதாக அமையவில்லை. அவருக்கு வழங்கப்பட்ட தண்டனை குறித்தும், அவரது இறுதி நாளைப்பற்றியும் அவரின் முதன்மை சீடரான பிளாட்டோ விளக்கமாக எழுதி வைத்துள்ளார்.

அவை இதோ....
ஏதென்ஸ்'இல் புரட்சி எற்ப்பட்டதின் முடிவாக மக்களாட்சி தொடங்கிய காலம், அன்றுவரை போர் வீரராக இருந்த சாக்ரடீஸ் புரட்சிக்குப்பிறகு மனம் மாறி தத்துவ ஞானியானார். அவரின் கருத்துக்களால் இளைஞர்களும், நாட்டு மக்களும் அவரின் பால் மிகுந்த அன்பு கொண்டிருந்தனர். அவர் அன்றைய ஆட்சி முறைப்பற்றியும் விமர்சிக்கத் தவறவில்லை. அதனால் கோபமடைந்த ஆட்சியாளர்கள் அவருக்கு தக்க பாடம் புகட்ட எண்ணினர். அவருக்கு மக்கள் மத்தியில் இருக்கும் நற்பெயரை குலைக்கவும் திட்டமிட்டனர். ஆனால் எதற்கும் அஞ்சாத சாக்ரடீஸ் தொடர்ந்து தன் பணிகளை மேற்கொண்டார்.
அதன் பயனாக அவர்மீது நாத்திகவாதம், இளைஞர்கள் மனதை கலைத்து வன்முறைக்குத் தூண்டுதல் போன்ற பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டது. "தவறு செய்தால் அதனை சுட்டிக்காட்டுவது என் கடமை.அதிலிருந்து என்னால் ஒருபோதும் தவற முடியாது" என்று நீதி மன்றத்தில் வாதாடினார் சாக்ரடீஸ். இறுதியில் அவருக்கு விஷம் குடித்து இறக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது ஏதென்ஸ்'இல் திருவிழா நடந்து கொண்டிருந்ததால் தண்டனை பதினைந்து நாட்கள் தள்ளி வைக்கப்பட்டது.
சிறையில் இருந்த சாகரடீசை பார்க்க தினமும் அவரது சீடர்கள் வருவது வழக்கம். அவர்களில் சிலர் சாக்ரடீசுக்கு தப்பிச்செல்ல ஏற்ப்பாடு செய்து தருவதாகவும், அவருக்கு அபராதத்தொகை கட்டி அவரை வெளியில் கொண்டு வர விரும்புவதாகவும் கூறியும் அவற்றையெல்லாம் மறுத்துவிட்டார்.

இறுதி நாள்....
இறுதி நாளிலும் அவரைக்காண அவரது சீடர்கள் வந்திருந்தனர். அவரது மனைவியும் வந்திருந்தார். சாக்ரடீஸ் இறக்கப்போவதை எண்ணி அனைவரும் வருத்தத்தில் இருந்தனர். வாய் விட்டு அழுத அவரது மனைவியை துணைக்கு ஒருவரை வைத்து வீட்டிற்க்கு அனுப்பிவிட்டார். காவலாளி குற்ற உணர்வுடன் கோப்பையில் விஷம் கொண்டுவந்து கொடுக்க, மகிழ்வுடன் அதனை வங்கி "இந்த விஷம் சரியாக வேலை செய்ய நான் ஏதாவது செய்ய வேண்டுமா?" என்று கேட்டார். அதெல்லாம் ஒன்றும் தேவையில்லை என்று சொன்ன மறுகணம் அந்த விஷத்தி அருந்தினார் அந்த மேதை. அருந்திய சில மணித்துளிகளில் உடலின் ஒவ்வொரு உறுப்புகளாக செயலிழக்க மரணத்தையும் அனுபவித்து , கண்களைத்திறந்தவாறே சாக்ரடீஸ் இறந்தார்.

3 comments:

Felix Raj said...

thagavaluku nandri, nandraga irunthathu

karthik said...

Socrates Greek philosopher, அவரிண் படைப்புகள் தத்துவஂகள் அறபுதமாணவை

மதுரை சரவணன் said...

good sharing. thanks

அதிகம் ரசிக்கப்பட்டவைகள்....

Blog Archive