March 13, 2010

காந்தி கணக்கு

பஸ்ஸில் விட்ட மிச்ச சில்லறை, நியாய விளைக்கடைக்காரர் இல்லையென்ற ஐம்பது பைசா காசு,கேட்க முடியாத நெருங்கிய நண்பர்களின் வாராக்கடன்... இப்படி சில "சில்லறை" வகையறாக்களை ,'இனி காந்தி கணக்குலதான்' என ஒதுக்கி விடுவோம். அனால் உண்மையில் 'காந்தி கணக்கு' என்பது வேறு.

இன்றைக்கு கிண்டலாகவும், கேலியாகவும், எதிர்மறை அர்த்தம் கொண்ட ஒரு சொல்லாக 'காந்தி கணக்கு'ஆகிவிட்டது. அனால் உண்மையாக இருக்கிற காந்தி கணக்கைப்பற்றி நம் யாருக்கும் தெரியாமலேயே போய்விட்டது. சத்தியத்தையும், நேர்மையையும் போதித்த அவரின் பெயரை நாம் இன்று ஏமாற்றும் செயல்களுக்கு பயன்படுத்துகிறோம்.

"சுதந்திரப்போராட்டம் மிகவும் தீவிரமாக இருந்த நற்ப்பதாம் ஆண்டு . வெள்ளைக்கார அதிகாரிங்க காந்தியடிகளை கைது செய்து புனேயில் ஒரு மாளிகைல வச்சிருந்தாங்க. நீண்ட காலமா சிறையில இருக்கவேண்டி இருந்தால கைச்செலவுக்குப் பணம் வேணும்னு அப்ப அங்கே இருந்த "பேங்க் ஆப் இந்திய"வுல பத்தாயிரம் ரூபா போட்டு ஒரு அக்கௌன்ட் ஆரம்பிச்சார் மகாத்மா . அப்ப அதிலிருந்துதான் செலவுக்குப் பணம் எடுப்பார். அப்புறம் கொஞ்ச நாள்ல அங்க இருந்து விடுதலையாகிப் போயிட்டாலும் அந்த கணக்கை மட்டும் முடிக்காமல் வச்சிருந்தாரு.

சுதந்திரம் வாங்கின மறு வருடம் காந்தி சுட்டுக்கொல்லப்பட்டப்ப அந்த வங்கிக் கணக்குல இருந்த மிச்சப் பணம் 248 ரூபாய். காந்திஇறந்துட்டாலும்மகாத்மாவுக்குசெலுத்துற மரியாதையாக அந்த கணக்கை முடிக்காமல் மிச்சப் பணத்தை அப்படியே அந்த வங்கியில் வைத்திருக்கிறார்கள். இன்றைக்கும் அந்த பணத்துக்கு என்ன வட்டியோ அதை காந்தி பௌண்டேஷனுக்கு அனுப்பி வைத்துவிடுகிறார்கள்".

காந்தி கணக்குல இருக்கிற பணம் என்றால் அது மிகுந்த மரியாதைக்குரியது. அது செலவாகாமல் அப்படியே இருக்கின்றது என்றுதான் அர்த்தம். ஆனா, நாளடைவில் நாம அதை தப்ப புரிஞ்சிக்கிட்டு கொச்சைப்படுத்த ஆரம்பித்துவிட்டோம்.இனிமேலாவது காந்தி கணக்கை கொச்சைப்படுத்தாமல் இருக்க முயற்சி செய்வோம்.




காந்தி கணக்கு

2 comments:

சௌந்தர் said...

இதுதான் உண்மையான காந்தி கணக்கு

Prasanna said...

நல்ல பகிர்வு..

//இனிமேலாவது காந்தி கணக்கை//

ரொம்ப பாதிக்க பட்டு இருப்பீங்க போல :)

அதிகம் ரசிக்கப்பட்டவைகள்....

Blog Archive