March 13, 2010

உருவ வழிபாட்டின் தோற்றம்

மனிதன் தோன்றிய காலத்தில் அவன் தன்னைச்சுற்றியும், தனக்குள்ளும் நிகழ்கின்ற மாறுதல்கள் குறித்த அறிவினைப்பெற்றிருக்கவில்லை. குறிப்பாக பிறப்பு, இறப்பு பற்றி அவனுக்குத்தெரியவில்லை. குழந்தை பிறப்பு ஒவ்வொரு முறையும் அவனுக்குப் புதிராகவே இருந்தது . பெண்ணின் வயிற்றிலிருந்து குழந்தை வருவது அவனுக்கு வியப்பைத்தந்தது. எனவே, அவன் பெண்ணைக் கடவுளுடன் ஒப்பிடத்தொடங்கினான்.
இறப்பு அவனுக்கு மேலும் பல குழப்பங்களைத் தந்தது. அப்போது இறந்தவர்களை அவர்களின் பொருட்களுடன் சேர்த்து பெரிய பானை போன்ற ஒன்றினுள் வைத்து விட்டனர். இதுவே பிற்க்காலத்தில்
"முதுமக்கள் தாழி" என்றழைக்கப்பட்டது. சிறிது கால மாற்றத்திற்குப் பின்னர், அந்தத் தாழிகளை மண்ணுக்குள் புதைக்கத்தொடங்கினர். இறந்தவர்களைக் கடவுள்களாக எண்ணினர். உடல்களைப் புதைத்துவிட்டு அடையாளத்திற்காக அதன் மீது கற்களை நட்டு வைத்தனர். அவர்கள் ஆவியாக உலவுவதாக நம்பினர். அதனால் அவர்களுக்குத் தேவையான உணவை நாள்தோறும் படைக்கத்தொடங்கினர். உடல்கள் புதைக்கப்பட்ட சமாதிகளின் மீது கற்களை நட்டதுடன் அவற்றைசுற்றிக் குடிசை வீடு போன்ற ஒன்றையும் உருவாக்கினர். காலப்போக்கில் அதையும் மாற்றி, இறந்தவர்களை அவார்கள் வாழ்ந்த கூடாரங்களிலேயே புதைத்துவிட்டு மற்றவர்கள் அந்த இடத்தை விட்டு வெளியேறினர்.
முன்னோர்களைக் காண்பதற்காக அவ்வப்போது வந்து வணங்கியும் சென்றனர்.

நாளடைவில் குடிசையினால் ஆனா வீடு போன்ற அமைப்பினை மாற்றிக் கற்க்களால் ஆன
சமாதிகளைக்கட்டினர். பின்னர் இறந்த தங்களது முன்னோர்களைப் போன்ற உருவங்களை உருவாக்கினர்.இவற்றை அவர்கள் தங்கள் கடவுள்களாக எண்ணி வணங்கினர். எகிப்தின் பிரமிடுகள் போன்ற பல்வேறு அமைப்பிலான கட்டிடங்களும் இவ்வாறுதான் தோன்றின. கால மாற்றத்தினாலும், கலைகளின் வளர்ச்சியாலும் சமாதியின் மீது வைக்கும் கற்களையும் , முன்னோர்களின் உருவங்களையும் கலைநயத்துடன் உருவாக்கினர். ஆரம்ப காலத்தில் கற்களின் உருவங்கள் பெரும்பாலும் பெண்களின் வடிவங்களாகவே இருந்தன. ஏனெனில், அவர்களுக்குத்தெரிந்த முதல் தெய்வம் பெண்தானே . காலப்போக்கில்
உருவங்களில் கற்பனைகளைப் புகுத்தினர். பின்னர் மனிதர்களுக்கு இருப்பதைப்ப் போலவே குடும்பம் , உறவுகள் போன்றவற்றைக் கடவுள்களுக்கும் உருவாக்கினர். அவர்களின் கற்பனைக்கு ஏற்றவாறு கோபுரங்கள்,கோவில்கள் ,அவற்றில் சிலைகள் போன்றவைகளும் உருவம் பெற்றன.

நாம் தற்போது வணங்கி வரும் உருவங்களும், கடவுள்களின் வடிவங்களும்இவ்வாறுதான் தோன்றின. கோவில்களில் பலியிடப்படும் உயிர்களின் உடலிலிருந்து வெளியேறும் ரத்தத்தினை அனைவரும் முகம், கைகளில் பூசிக்கொண்டனர். அதுதான் இன்று கோவில்களில் குங்குமம் தரும் பழக்கமாக மாறியுள்ளது.

அதேபோல் இறந்த உடல்களை எரித்து சாம்பலைச் சேகரித்து அதனையும் உடலில் பூசிக்கொள்ளும்பழக்கம்தான் இன்று மாறி திருநீறு வடிவத்தை அடைந்துள்ளது.

No comments:

அதிகம் ரசிக்கப்பட்டவைகள்....

Blog Archive