March 22, 2010

உலகம் வெப்பமயமாதல்-புதிதல்ல!





இன்று உலக நாடுகள் அனைத்திற்கும் பொதுவான, முக்கியமான பிரச்சினை என்று பார்த்தால் அது உலகம் வெப்ப மயமாதல் தான். இங்கு உலக நாடுகள் என்பது எல்லா நாடுகளிலும் வசிக்கும் மக்களை.
"உலகம் வெப்பமயமாதலை தடுக்க வேண்டும்...", "கடல் நீர் மட்டம் உயர்ந்து கொண்டுள்ளது...", "இந்த நூற்றாண்டிலோ அல்லது அடுத்த நூற்றாண்டிலோ இந்த உலகம் கடல் நீரால் மூழ்கடிக்கப்பட்டு விடும்!"
என்று இப்போது எல்லோரும் அதைப்பற்றி பேசுகிறோம், அதை எப்படி தடுப்பது என்று மாநாடுகளெல்லாம் போடுகிறோம். ஆனால் இந்த உலகம் வெப்பமயமாதல் நேற்று, இன்று தோன்றியதில்லை.இதன் வரலாறு 17,000 ஆண்டுகள் பழமையானது!
ஆம், 17,000 ஆண்டுகள் என்று சொல்லுவது சரியானதா? அல்லது அதற்க்கு முன்போ கூட உலக வெப்பநிலையில் மாற்றம் நிகழ்ந்திருக்கலாம். முதன் முறையாக நிகழ்ந்த அந்த வெப்பநிலை உயர்வு இயற்கையானது. என்பது அறிவியலாளர்களின் கருத்து.

இதைப்பற்றி மேலும் அவர்கள் கூறும் பொது:

மனித நாகரிகம் தோன்ற இந்த வெப்ப நிலை உயர்வு மிக முக்கிய காரணமாக இருந்துள்ளது. முதன் முதலாக உலகின் வட மற்றும் தென் துருவங்களில் இருந்த பனிப்பாறைகள் மெல்ல மெல்ல உருகத்தொடங்கின. ஆங்காங்கே இருந்த ஏரிகளும், நீர்நிலைகளும், நதிகளாக மாறின.இதன் தொடர்ச்சியாக கோடான கோடி டன் பனிப்பாறைகளும் உருகி நதிகளாக ஓடி கடலில் கலந்து கடல் நீர்மட்டம் உயார்ந்தது.
கி.மு 10,000இல் அப்பிரிக்காவின் மத்தியிலுள்ள விக்டோரியா ஏரியின் நீர்மட்டம் உயர்ந்து வழியத்தொடங்கியதில் பிரம்மாண்டமான நைல் நதி உருவானது.தென் அமெரிக்க வின் அமேசான் நதி தனக்குத்தானே வழி வகுத்துக்கொண்டது. தொடர்ந்து கிட்டத்தட்ட 3000௦௦ ஆண்டுகள் பனிக்கட்டிகள் தொடர்ந்து உருகின. இதனால் பல பகுதிகள்
நீரினால் மூழ்கடிக்கப்பட்டன. அமெரிக்காவிற்கும் பிறநாடுகளுக்கும் இடையிலான தரை வழி தொடர்பு துண்டிக்கப்பட்டது இதனால்தான். அதே போல் கொரியவுடனும், சைபீரியவுடனும் ஒர்ட்டிக்கொண்டிருந்த ஜப்பான் இதனால் தான் தனித்து விடப்பட்டது. கி.மு 15000 ௦௦இல் தற்போதுள்ள மெரீனா கடற்க்கரை 600 கி.மீ கிழக்குப் புறமாக தள்ளி இருந்தது! என்பதை உங்களால் நம்பமுடிகிறத? அண்மையில் குஜராத்தில் கடலுக்கடியில் 9 கி.மீ நீளத்தில் ஒரு நகரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அன்றைய மனிதன் இதனையெல்லாம் கவனிக்கவில்லை. அப்படியே கவனித்திருந்தாலும் அதனால் ஏற்ப்படும் பாதிப்புகளை அவன் அனுமானித்திருக்க வாய்ப்பில்லை. இன்று நாம் ஏன் இப்படி இதைப்பற்றி அதிகமாக கவலைப்படுகிறோம் என்றால்?... அன்று 3000௦௦ ஆண்டுகள் தொடர்ந்து பனிக்கட்டி உருகியதால் ஏற்ப்பட்ட கடல் நீர் மட்ட உயர்வை விட இன்று ஒரு நூற்றாண்டில் ஏற்ப்படும் கடல் நீர் மட்ட உயர்வு அதிகம். தற்போது நாம் வெளியேற்றும்அதிகப்படியான கார்பன் மற்றும் அவற்றின் கூட்டுப்பொருள்களின் அளவினால் உலக வெப்பநிலை உயர்வு வேகமாகவும், அதிகமாகவும் நிகழ்ந்து வருகிறது.
ஆம்.20 ௦ம் நூற்றாண்டில் மட்டும் 17 செ.மீ கடல் நீர் மட்டம் உயர்ந்துள்ளது. 21 ம் நூற்றாண்டில் இது மேலும் 18-50 செ.மீ உயரும் என்பது விஞ்ஞானிகளின் கருத்து. கடல் நீர் மட்டம் உயர்ந்த பொது ஏராளமான உயிரினங்கள் அழிந்து போயின. இன்னும் ஆயிரம் ஆண்டுகள் கழித்து கடல் நீர் மட்ட உயர்வினால் அழிந்த உயிரினனகளில் மனித இனமும் ஒன்று. என்ற நிலை வரலாம். அல்லது மனிதன் தன் அசாத்தியமான அறிவுத்திறனால் புதிய உலகையே நிர்மாணிக்கலாம். ஆனால் அது வரையில் இப்போது இருக்கும் இடத்தை பாதுகாக்க வேண்டியது நம் அனைவரின் பொறுப்பு. அதற்கு அறிவியலாளர்கள் கூறும் வழி முறைகளை நாம் பின்பற்றித்தானாகவேண்டும்.

2 comments:

Unknown said...

Its one of the best three minutes that i have been spent in my life.
I expect more like this from you.

ponmadhu said...

நல்ல பயனுள்ள கட்டுரைகள். பாராட்டுக்கள்.
ponmadhu@gmail.com

அதிகம் ரசிக்கப்பட்டவைகள்....

Blog Archive