March 15, 2010

பறவைகள் பலவிதம்...


"கடல் தாண்டும் பறவைக்கெல்லாம்
வழியில் மரங்கள் கிடையாது
ஆனாலும் கண்டம் தாண்டும்
சிறகுகள் வலிக்காது....
"

எப்படி?...
இதன் பின்னால் பிரம்மிப்பூட்டும் ஒரு ரகசியம் ஒளிந்துள்ளது.

பொதுவாக கண்டம் விட்டு கண்டம் தாண்டும் பறவைகள் எப்போது கூட்டமாகத்தான் தங்களது பயணத்தைத் தொடங்குகின்றன. முதலில் ஒரு பறவை காற்றைக் கிழித்துக்கொண்டு, காற்றின் எதிர்த்திசையில் அதிக ஆற்றலை செலவிட்டுப் பறக்கின்றது. அதன் பின்னால் இரண்டு பறவைகள் பறக்கின்றன.இந்த இரண்டு பறவைகளுக்கும் பறப்பது முதல் பறவையை விட சற்று எளிது. ஏனெனில் முதல் பறவை உருவாக்கிய
வெற்றிடத்தைப் பயன்படுத்தி இவை பறக்கின்றன. இவற்றிற்கு பின்னால் நான்கு பறவைகள், முன்னால் செல்லும் பறவைகள் உருவாக்கிய வெற்றிடத்தில் பறக்கின்றன. இவற்றிக்கு பின்னால் எட்டு,பதினாறு,...

இப்படியே இவை முக்கோண வடிவத்தில் பறக்கின்றன.கடைசி வரிசையில் பறக்கும் பறவைக்கு அதிகப்படியான ஆற்றலை செலவிடத்தேவையில்லை. ஏனெனில் அதற்க்கு முன்னால் பறக்கும் பறவைகள் ஏற்ப்படுத்திய வெற்றிடத்தைப் பயன்படுத்தி இவை எளிதாகப்பறக்கின்றன. குறிப்பிட்ட தூரம் பறந்ததும் முதல் பறவை மெதுவாக நகர்ந்து கடைசி வரிசைக்கு வருகிறது. கடைசி வரிசையிலிருந்து ஒரு பறவை முதலாவதாகச் சென்று பிற பறவைகளை அழைத்துச்செல்கிறது. மீண்டும் குறிப்பிட்ட தூரம் வந்தவுடன் பறவைகள் தங்களுக்குள் இடம் மாறிக்கொள்கின்றன. இப்படி தங்களுக்குள் இடம் மாறி மாறி எந்த உணவும், ஓய்வும் இன்றி கடற்ப்பரப்பைத் தாண்டுகின்றன. பறவைகள் கூட ஒற்றுமையின் வலிமை பற்றி அறிந்துள்ளன.

மனிதர்கள்?...

No comments:

அதிகம் ரசிக்கப்பட்டவைகள்....

Blog Archive