June 20, 2010

தன்னலமற்ற தந்தைகள்....


இன்று 'தந்தையர் தினம்'.
தாங்கள் சார்ந்த, தங்களை சார்ந்த குடும்ப உறுப்பினர்களுக்காகவே நாள்தோறும் உழைத்துக்கொண்டு இருப்பவர்களுக்கான தினம்.
ஆனால் இன்று வரையில் தந்தையர்கள் என்னைப்போன்ற பிள்ளைகளிடம் இருந்தோ... அல்லது மற்ற குடும்ப உறுப்பினர்களிடம் இருந்தோ... அல்லது இந்த சமுதாயத்திடம் இருந்தோ... எதையும் எதிர்பார்த்தது இல்லை. அவர்கள் தன்னலம் எண்ணாமல் செய்யும் கடமைகளுக்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்று கூட அவர்கள் எதிர் பார்ப்பது இல்லை. ஏன்? நாம் யாருமே அவற்றை அவர்களின் கடமை என்று சொல்லி அவர்களின் தியாகங்களை எண்ணிப்பார்ப்பது கூட இல்லை. மாறாக அவர்கள் தியாகம் செய்ய கொஞ்சம் அவகாசம் கேட்டால் கூட நாம் அவர்களை கடமை செய்ய தவறுகிறார்கள் என்று அவதூறு பேசுகிறோம்.
தந்தையர்கள் தங்களால் இயன்ற வரையில் பிள்ளைகளுக்காக உழைக்கின்றனர், அவர்களுக்கு தேவையானவற்றை எல்லாம் செய்து கொடுக்கின்றனர், அவர்களுக்காகவே தங்களுடைய சுய, அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதை கூட தள்ளி வைக்கின்றனர். ஆனால் பெரும்பாலான பிள்ளைகள் அவர்களை வயதான காலங்களில் தங்களுடன் வைத்துக் கொள்வது இல்லை. தன மகன் நல்ல நிலையில் இருக்கும் போதும் தனியாக இருந்து கொண்டு தன மனைவிக்காக தள்ளாத வயதிலும் உழைக்கும் எத்தனையோ தந்தைகளை நாம் பார்க்கிறோம்.
ஆண்டாண்டு காலமாக அன்னையர்களை புகழ்ந்து கொண்டு இருக்கும் நாம் ஏனோ? தந்தையர்களை சாதாரணமாக பாராட்டுவது கூட இல்லை. தாயை பாடும் கவிஞர்கள் ஏனோ தந்தையை பாடுவதே இல்லை?... அதற்காக அன்னையர்களை பாராட்ட வேண்டாம் என்று இல்லை. தியாகம் செய்வதில் அன்னையர்களுக்கு எந்த வகையிலும் தந்தையர்கள் குறைந்தவர்கள் இல்லை என்பது தான் என் கருத்து. ஆனால் அதனை கூட அவர்கள் பெரிதாக எடுத்துக்கொள்ள வில்லை. தந்தையர்கள் தங்கள் கடமைகளை நிறைவேற்ற பாடுபட்டுக்கொண்டு இருக்கின்றனர்.

இன்று தந்தையர் தினம் என்பது கூட எத்துனை பேருக்கு தெரியும் என்று நினைக்கிறீர்கள்?... மிகவும் கொஞ்சம் தான்.

தந்தையர்களுக்கு நான் பாராட்டு விழா எடுக்க சொல்ல வில்லை. அதனை எதிர் பார்த்தும் அவர்கள் தங்கள் பணிகளை செய்வதில்லை. அவர்களின் வேதனைகளையும், கடமைகளையும் பங்கிட்டுக்கொள்வோம். நம்மால் இயன்ற அளவிற்கு அவர்களை மகிழ்வாக வைத்துக்கொண்டு இருக்க முயல்வோம். என்பது தான் என் பணிவான வேண்டுகோள்...

5 comments:

ப்ரியமுடன் வசந்த் said...

http://s260.photobucket.com/albums/ii25/zooboozdotcom/Comments/Seasonal/Fathers-Day/happy-fathers-day.gif

priyamudanprabu said...

http://priyamudan-prabu.blogspot.com/2009/03/blog-post_22.html


நான் சொல்ல நினைப்பதை இங்கே பாருங்க

Asiya Omar said...

நல்ல இடுகை,நியாயமான ஆதங்கம்.அன்பான தந்தையர் தின வாழ்த்துக்கள்.

Riyas said...

நல்ல பதிவு.. அவர்கள் என்றும் போற்றப்படவேண்டியவர்கள்..

http://riyasdreams.blogspot.com/2010/06/blog-post_5095.html

அ.முத்து பிரகாஷ் said...

உங்கள் ஆதங்கங்கள் நியாயமானவை ...
யோசிக்கவும் பின்பற்றவும் செய்ய வேண்டியவை ...
வேண்டுகோளல்ல ... கட்டளை என்று கூட நீங்கள் சொல்லலாம் ... உரிமையோடு ...
வருகிறேன் தோழர் !
----------
தந்தையர் தினம் கொண்டாடினேன்!
http://neo-periyarist.blogspot.com/2010/06/blog-post_21.html

அதிகம் ரசிக்கப்பட்டவைகள்....

Blog Archive