"அட கிளிபுள்ள எங்கடா போன?... உன்னை தான்டா தேடிட்டு இருக்கேன்..."
"என்னடா கீரிபுள்ள? என்ன விஷயம்?...."
"இந்த மாயாண்டி ஞாபகம் இருக்காடா?.. நம்மள ஒரு தடவை அவங்க வீட்ல திருடிடோம்னு போலீஸ் ஸ்டேஷன்ல உட்கார வச்சானே?...."
"அட ஆமாண்டா.... கை செலவுக்கு காசு இல்லன்னு அவங்க வீட்டு கிணத்து மேட்டுல இருந்த வாளிய களவாட போனப்ப அவங்க வீட்டு நாய் கத்தி கூப்பாடு போட்டு காட்டி கொடுத்துசே அந்த மாயாண்டி தானே?...."
"ஆமாண்டா கிளி.... அவனே தான்.... அவன பழி வாங்க நமக்கு இப்போ ஒரு நல்ல வாய்ப்பு கிடச்சி இருக்குடா கிளி...."
"அட போடா கீரி.... ஏற்கனவே ஒரு தடவ காட்டி கொடுத்த அந்த நாய கடத்த ப்ளான் பண்ணி அந்த நாய் கிட்ட கடி வாங்கி அதுக்கே இன்னும் வைத்தியம் பார்த்து முடியல அதுக்குள்ள அடுத்த ப்ளானா?...."
"அடேய் கிளி தொழில்னு வந்துட்டா ஒன்னு ரெண்டு இந்த மாதிரி நடக்க தான்டா செய்யும் அதுக்காக பயந்தா எப்புடி டா?....."
"ஆமா..... இப்ப மட்டும் நல்ல பேசு அந்த நாய் நம்மள நல்லா அடையாளம் பார்த்துடுச்சின்னு அந்த ஏரியா பக்கமே போகாம இருக்கோம் இந்த லட்சனத்துல பழி வாங்குறது எல்லாம் எப்புடி டா..."
"ஹ்ம்ம் அப்புடி கேளு..... அந்த மாயாண்டி மகனுக்கு கல்யாணமாம் நம்ம ரெண்டாவது தெருவுல இருக்குற மண்டபத்துல தான் நாளைக்கு நடக்க போகுது, இப்போ தான் ஒவ்வொரு பொருளா மண்டபத்துக்கு கொண்டு போயிட்டு இருக்காங்க.....
இன்னிக்கு ராத்திரி நாம அங்க நம்ம கை வரிசையா காட்டனும், அந்த மாயாண்டியும் அவங்க குடும்பமும் ஏண்டா இந்த கிளிபுள்ளயையும், கீரிபுள்ளயையும் பகச்சிகிட்டோம்னு கல்யாண நேரத்துல யோசிச்சி வருத்தப்படனும், நாம பண்ண போற இந்த திருட்டு நம்மள பத்தி இந்த ஊருக்கே தெரிய வைக்கணும், நம்ம மேல ஒரு பயத்தையே இந்த ஊரு காரங்க மனசுல கொண்டு வரணும், இது இத்தன நாள் நாம செஞ்ச மாதிரி சாதாரண திருட்டா இருக்க கூடாது டா, ரொம்ப பெரிய விஷயமா இருக்கணும், நம்ம மகன் கல்யாணத்துல பொய் இப்படி ஆகனுமானு அவன் துடிக்கனும்...."
"கீரி என்னடா சொல்ற? நீ பில்டப் கொடுக்குறத பார்த்த ஏதோ பெரிய ப்ளான் வச்சி இருக்க போல இருக்கு, என்னடா யோசிச்சி வச்சி இருக்க?...."
"வா அந்த ப்ளான உனக்கு சொல்றேன். நான் சொல்ற மாதிரி நீ இன்னிக்கு நைட் செஞ்சிட்டா போதும் நம்ம எதிரிய பழி வாங்கின சந்தோஷமும் நிம்மதியும் நமக்கு கிடைக்கும்......"
இரவு நேரம் பன்னிரண்டை கடந்து இருந்தது கிளிபுள்ளையும் கீரிபுள்ளையும் யாருக்கும் தெரியாமல் மிகவும் கவனமாக திட்டத்தை செயல் படுத்தினார்கள்.... நேரம் அதிகாலை மூன்று மணி... இருவரும் எதையோ சாதித்த ஒரு மகிழ்ச்சியில் திருமண மண்டபத்தை விட்டு சென்று கொண்டு இருந்தார்கள்.........
"மச்சான் கிளிபுள்ள... நாம திட்டம் போட்ட மாதிரியே எல்லாத்தையும் பண்ணிட்டோம் டா... நாளைக்கு பாரு இந்த கல்யாண வீடே அலற போகுது....."
"அட போடா கீரி என்ன இருந்தாலும் இவ்வளவு பெரிய தண்டனை அவனுக்கு கொடுத்து இருக்க கூடாது டா.... என் மனசு ஒத்துக்கல டா...."
"போடா... நம்மள போலீஸ் கிட்ட பிடிச்சி கொடுத்தான்ல, இது அவனுக்கு தேவை தான். இப்போ நாம இந்த சந்தோஷத்த கொண்டாடியே ஆகணும்......" என்றவாறு பேசிக்கொண்டே சென்றார்கள்.....
மறுநாள் காலை ஐந்து மணி..... திருமண மண்டபத்தில் ஒரு அலறல்.....
"அண்ணே........ மாயாண்டி அண்ணே...........
நாம வாசல்ல காட்டி இருந்த வாழை மரத்துல இருந்த வாழைத்தாரை யாரோ களவாண்டுகிட்டு போய்ட்டானுங்க அண்ணே....."
அங்கே கிளிபுள்ளையும் கீரிபுள்ளையும் கொண்டாட்டத்தை தொடங்கி இருந்தார்கள்......
July 31, 2011
Subscribe to:
Post Comments (Atom)
அதிகம் ரசிக்கப்பட்டவைகள்....
-
இன்று உலக நாடுகள் அனைத்திற்கும் பொதுவான, முக்கியமான பிரச்சினை என்று பார்த்தால் அது உலகம் வெப்ப மயமாதல் தான். இங்கு உலக நாடுகள் என்பது எ...
-
மம்மி'க்களின் மறுபக்கம் என்றால் அவற்றை குப்புறப்போட்டு, அவற்றின் முதுகுப்பகுதியில் என்ன இருக்கிறது என்பதை பார்ப்பதில்லை. மும்மி&...
-
"இந்த வழக்கின் சாட்சிகளையும், ஆதாரங்களையும் தீர விசாரித்ததில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நபர் தான் குற்றத்தை செய்தார் என்று சந்தேகத்துக...
1 comment:
நன்றாகவுள்ளது மணி.
தொடர்ந்து வலையில் உலவுக.
தங்கள் உணர்வுகளையும், கொள்கைகளையும் பகிர்ந்துகொள்ள நல்லதொரு ஊடகம் இது.
Post a Comment