காதல் கவிதை எழுத வேண்டும் என்று தோன்றியது, அதனால் தான் எழுதினேன்.
சூழல் என்ன என்று முதலில் சொல்லிவிடுகிறேன்....
" உன் காதலியை பற்றி சொல் என்று தலைவனிடம் கேட்கிறாள் அவள் தோழி...
'அவள் அழகான முகம் மட்டும் தான் எனக்கு நினைவு இருக்கிறது அதை எப்படி உன்னிடம் சொல்வது என்று தெரியவில்லை' என்று நிற்கிறான் தலைவன். எவ்வளவோ முயன்றும் அவனால் காதலியைப்பற்றி சொல்ல இயலவில்லை. என்ன செய்வது?..." காதலியை வர்ணிக்கும் போது கவிஞனும் கஞ்சன் ஆகிறான்..." ஆனால் நம் தலைவன் உண்மையிலேயே கவிதை எழுதும் திறன் உள்ளவன்தான், எனவே கவிதை எழுதி விட்டான்.
அவளைப்பற்றி சொல்...
எளிதாய் இருந்தது கேள்வி எப்படி சொல்வேன் நான்?
உயிரின் உருவத்தை வரையறுக்க சொன்னால்
எப்படி செய்வேன் நான்?...
இங்கே என் உயிரை அல்ல,
எனுயிரினுள் உறைந்து இருக்கும் இன்னொரு உயிரை
சற்று கடினம் தான் இருந்தாலும் முயற்சி செய்கிறேன்...
அவளின் முகம் அது நிலவல்ல,
ஏனெனில் அவளிடம் கறைகள் இல்லை.
அவளின் முகம் மலரல்ல,
ஏனெனில் அவள் மாலை ஆனதும் வாடிவிடுவது இல்லை.
அவளின் விழிகள்
அப்பப்பா அவை விழிகள் அல்ல,
நான் விழுந்து கிடக்கும் குழிகள்.
அவள் என் மீது வீசுவது பார்வை அல்ல,
நான் வாழ அவள் செய்யும் சேவை.
அவளின் ஒரு விழி ஏற்படுத்தும் காதல் நோய்க்கு
மறுவிழியே மருந்தாகும்.
அவள் பேச மொழிகளும் விரதம் இருக்கும்
அவள் நடக்க நிலம் காத்திருக்கும்
அவளை உரச மேகங்களும் முயற்சி செய்யும்
அவளை கடக்க காற்றும் போட்டியிடும்
பனித்துளி அவள் மீது படாது
குளிர் தாங்க மாட்டோம் என்று பயம் அதற்கு
தீயும் அவளை தீண்டாது
எரிந்து விடுவோம் என்று பயம் அதற்கு
ஆதவன் அவளை காணவே அனுதினமும் எழுகிறான்
மறைய மனமில்லாமல் மாலையில் ஏங்குகிறான்
சந்திரனுக்கும் என்னவளை சந்திக்க தைரியம் இல்லாததால்
அவள் கன்னுரங்கிய பிறகு வெளியே வருகிறான்
அவளிடம் உள்ள மணத்தை வேண்டி மலர்களும் காத்திருக்கும்
அவளிடம் உள்ள அழகை வேண்டி தமிழும் காத்திருக்கும்.
July 24, 2010
Subscribe to:
Post Comments (Atom)
அதிகம் ரசிக்கப்பட்டவைகள்....
-
இன்று உலக நாடுகள் அனைத்திற்கும் பொதுவான, முக்கியமான பிரச்சினை என்று பார்த்தால் அது உலகம் வெப்ப மயமாதல் தான். இங்கு உலக நாடுகள் என்பது எ...
-
மம்மி'க்களின் மறுபக்கம் என்றால் அவற்றை குப்புறப்போட்டு, அவற்றின் முதுகுப்பகுதியில் என்ன இருக்கிறது என்பதை பார்ப்பதில்லை. மும்மி&...
-
"இந்த வழக்கின் சாட்சிகளையும், ஆதாரங்களையும் தீர விசாரித்ததில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நபர் தான் குற்றத்தை செய்தார் என்று சந்தேகத்துக...
2 comments:
அவள் பேச மொழிகளும் விரதம் இருக்கும்
,,,//
nice brother
நல்ல காதலிக்கிறாய்
Thankyou brother prabu...
Post a Comment