June 16, 2010
நாத்திக நாடு...
கடவுள் நம்பிக்கை என்பது இன்றைய மனிதர்களில் ஏறக்குறைய அனைவருக்கும் இருக்கும் ஒன்று. தன்னை நம்பாதவர்கள் கூட கடவுளை நம்புவார்கள். ஒருசிலர் 'கடவுள் என்று ஒன்று எதுவும் இல்லை, நாமாக உருவாக்கிக்கொண்டது தான் எல்லாம்' என்று பேசினால் அதுவும் கடவுளின் செயல்தான் என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். அப்படியிருக்கையில் ஒரு நாடே "எங்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை நாங்கள் நாத்திகர்கள்" என்று தங்களை தாங்களே அறிவித்துக்கொண்டால் எப்படி இருக்கும்? ஆம், அப்படி ஒரு நாடு உண்டு......
ஐரோப்பாவில் உள்ள அல்பானியா என்ற நாடுதான் அது. கிட்டத்தட்ட 400 ஆண்டுகள் துருக்கிய ஆட்சியின் கீழ் இருந்த அல்பானியா 1912இல் சுதந்திரம் பெற்றது. பின்னர் இரண்டாம் உலகப்போரின் போது இத்தாலியால் கைப்பற்றப்பட்டது.(கைப்பற்றியவர் முசோலினி) பின்னர் கொஞ்ச நாட்கள் பொறுத்துக்கொண்டு வாழ்ந்த மக்கள் புரட்சியில் ஈடுபட்டு 1947 இல் உள்நாட்டுப்போர் வெடித்தது. இப்போரில் இத்தாலி தோல்வி அடைந்தது.
பிறகு அல்பானியா கம்யூனிச நாடாக மாறியது. அல்பானியா கம்யூனிஸ்ட் தலைவர் 'ஹோக்ஸா' அதிபரானார். அதன் பின்னர் மற்ற நாடுகளைப்போலவே அமைதியாக இருந்து வந்தனர். 1967 இல் உலகின் முதல் நாத்திக நாடாக தன்னை அறிவித்துக்கொண்டது. அந்த நாட்டில் கோவில்களும் இல்லை, தேவாலயங்களும் இல்லை, மசூதிகளும் இல்லை. உலகின் முதல் நாத்திக நாடு அது தான். கடைசியும் கூட.....
Labels:
நாத்திக நாடு.....
Subscribe to:
Post Comments (Atom)
அதிகம் ரசிக்கப்பட்டவைகள்....
-
இன்று உலக நாடுகள் அனைத்திற்கும் பொதுவான, முக்கியமான பிரச்சினை என்று பார்த்தால் அது உலகம் வெப்ப மயமாதல் தான். இங்கு உலக நாடுகள் என்பது எ...
-
மம்மி'க்களின் மறுபக்கம் என்றால் அவற்றை குப்புறப்போட்டு, அவற்றின் முதுகுப்பகுதியில் என்ன இருக்கிறது என்பதை பார்ப்பதில்லை. மும்மி&...
-
"இந்த வழக்கின் சாட்சிகளையும், ஆதாரங்களையும் தீர விசாரித்ததில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நபர் தான் குற்றத்தை செய்தார் என்று சந்தேகத்துக...
5 comments:
There are no official statistics regarding religious affiliation in Albania. Estimates of the religious allegiance of the population of Albania vary, with some sources suggesting that the majority do not follow or practice any religion.[71] A study by the Pew Research Center puts the percentage of Muslims in Albania at 79.9%,[72] with the remaining 20% consisting of Christians. The CIA World Factbook gives a distribution of 70% Muslims, 20% Eastern Orthodox, and 10% Roman Catholics.[73] According to the World Christian Encyclopedia, roughly 39% of Albanians are Muslim, and 35% Christian...
The Communist regime that took control of Albania after World War II suppressed religious observance and institutions and entirely banned religion to the point where Albania was officially declared to be the world's first atheist state.
http://en.wikipedia.org/wiki/Albania#Demographics
அரசாங்கம்தான் நாத்திக நாடாக அறிவித்துள்ளது. சட்டத்தால் மக்களின் நம்பிக்கையை அழிக்கமுடியுமா?
செய்தி எனக்கு புதிது
i like GK oriented article, wishes for your blog
keep it up
மதர் தெரசா இந்தியனாகும் முன் அல்பேனியன்
அருமையான தகவல் பிரபு..
வார்ப்புரு மிகவும் அருமை..
ஓட்டுப்பட்டைகளையும் சேர்க்கவும்.
Post a Comment